சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை வீட்டில் இருந்தே பாதுகாப்பாக கண்டு ரசிக்க சில ஐடியாக்கள்

முழு ஊரடங்கு காரணமாக கிரகணத்தின் போது கிரகணத்தை பார்த்து ரசிக்க சென்னை பிர்லா கோளரங்கத்தில் தகுந்த ஏற்பாடுகள் செய்யவில்லை, பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் இருந்தே இந்த கிரகணத்தை

Google Oneindia Tamil News

சென்னை: சூரிய கிரகணமோ, சந்திர கிரகணமோ நிகழும் போது மக்கள் அதனை கண்டு ரசிக்க சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் ஏற்பாடுகள் செய்யப்படும். இந்த ஆண்டு நாளை மறுநாள் சூரிய கிரகணம் நிகழ உள்ள நிலையில் முழு ஊராடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பிர்லா கோளரங்கத்திற்கு மக்கள் செல்ல முடியாது என்பதால் வீட்டிருந்தே நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பாதுகாப்பாக கண்டு ரசிக்க கோளரங்க இயக்குநர் சில ஐடியாக்களை கூறியுள்ளார்.

சூரிய கிரகணம் உலகில் முதலாவதாக 9.15.58 மணிக்கு தொடங்குகிறது. முழு கிரகணம் காலை 10.17.48 மணிக்கு தொடங்குகிறது. உச்சக்கட்ட கிரகணம் நண்பகல் 12.10.04 மணிக்கு நிகழ்கிறது. சில பகுதியில் கிரகணம் முடியும் நேரம் மதியம் 14.02.17 மணிக்கு தென்படும். கடைசியாக கிரகணம் முடியும் நேரம் 15.05.01 மணிக்கு முடிவடையும்.

21ஆம் தேதி நிகழும் இந்த கிரகணம் சென்னையில் 10.22 மணி முதல் 11.58 மணி வரை தெரியும். வெறும் கண்களாலோ, பைனாகுலர் மூலமாகவோ இதனை பார்க்கக்கூடாது.

தந்தையர் தினத்தில் சூரிய கிரகணம் வருவதால் எந்த ராசிக்காரங்க ரொம்ப லக்கி தெரியுமா தந்தையர் தினத்தில் சூரிய கிரகணம் வருவதால் எந்த ராசிக்காரங்க ரொம்ப லக்கி தெரியுமா

சூரியனின் பிம்பத்தை பாருங்க

சூரியனின் பிம்பத்தை பாருங்க

முழு ஊரடங்கு காரணமாக கிரகணத்தின் போது கிரகணத்தை பார்த்து ரசிக்க பிர்லா கோளரங்கத்தில் தகுந்த ஏற்பாடுகள் செய்யவில்லை, பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் இருந்தே இந்த கிரகணத்தை பார்ப்பதற்கு சில ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். ஒரு வெள்ளை அட்டையில் சிறிய அளவில் ஒரு சென்டி மீட்டர் விட்டம் கொண்ட ஒரு சிறிய துளையிட்டு கீழே தரையில் வைத்து வெண்ணிற ஆடையை வைத்து, துளையிட்ட அட்டையினை சற்று உயர்த்திப் பிடித்தால் சூரியனுடைய பிம்பம் கீழே உள்ள அட்டையில் விழுவதை பார்க்கலாம்.

அட்டையில் சூரியனின் பிம்பம்

அட்டையில் சூரியனின் பிம்பம்

கிரகணம் நிகழும் பொழுது கிரகணத்தின் வடிவத்திற்கு ஏற்ப நாம் அந்த இமேஜில் இருந்து இந்த கிரகணம் மாறுவதை நம்மால் பார்க்க முடியும். கண்ணாடியில் ஒரு சென்டி மீட்டர் விட்டம் கொண்ட துளையிட்ட ஒரு அட்டையை ஒட்டி சூரியனுடைய பிம்பத்தை அதில் பிரதிபலிக்கச் செய்து ஒரு இருண்ட அறைக்குள் சுவற்றில் அந்த சூரியனுடைய பிம்பத்தை விழ செய்யலாம் .

திரையில் சூரியன் பிம்பம்

திரையில் சூரியன் பிம்பம்

வெல்டர்ஸ் கிளாஸ் மூலம் சூரியனை சில விநாடி நேரங்கள் பார்க்கலாம், அங்கீகரிக்கப்பட்ட சூரிய ஒளி வடிகட்டி கண்ணாடிகள் இருந்தால் அதனைக் கொண்டும் சூரியனே பார்க்கலாம் .பைனாகுலர் அல்லது தொலை நோக்கியை பயன்படுத்தி ஒரு வெண் திரையில் பிம்பத்தை விழ வைத்து பார்க்க வேண்டும்.

பாதுகாப்பாக கிரகணத்தை ரசிங்க

பாதுகாப்பாக கிரகணத்தை ரசிங்க

புற ஊதாக் கதிர்கள் விழித்திரை செல்களை பாதிக்கும் என்பதால் வெறும் கண்களால் பார்க்கக் கூடாது, சூரிய கிரகணத்தை பார்க்க சிறப்பு கண்ணாடிகள் பயன்படுத்த வேண்டும். எக்காரணத்தை கொண்டும் வெறும் கண்ணால் பார்க்க கூடாது, இந்த செயல்பாடுகளுக்கு குழந்தைகளுக்கு பெரியவர்கள் வழிகாட்டியாக இருந்து குழந்தைகளை தொலைநோக்கி பைனாகுலர் ஆகியவற்றைப் பயன்படுத்தாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.‌ 2031ம் ஆண்டில் தேனியில் முழு சூரிய கிரகணம் அதிகளவில் தெரியும் என்றும் கோளரங்க இயக்குநர் கூறியுள்ளார்.

English summary
The rare solar eclipse or the 'ring of fire' on Sunday would be clearly noticeable in all parts of India. During the June 21 solar eclipse the Sun is expected to appear as a necklace of pearls for around 30 seconds, and thus it gets the "ring of fire" nickname.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X