• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

உலக யோகா தினம்: சேரா யோகா நடத்தும் யோகத்தான் போட்டி - சூரிய நமஸ்காரம் செய்யலாம்

|

சென்னை: உலக யோகா தினம் இம்மாதம் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது.அதையொட்டி வரும்16ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில்.யோகத்தான் தொடர் சூரிய நமஸ்காரம் என்ற நிகழ்ச்சியை சேரா யோகமந்திரம் என்ற அமைப்பினர் நடத்த உள்ளனர்.

சூரிய நமஸ்காரம் நமது முன்னோர்கள் தந்த ஒரு அற்புதமான வரப்பிரசாதம். நாம் தினசரி தொடர்ந்து சூரிய நமஸ்காரங்கள் செய்து வந்தால் நோய் நொடிகள் நீங்கி நமது மனமும் உடலும் சூரியனைப் போல பிரகாசிக்கும். இந்த ஆசனத்தில் பன்னிரண்டு ஆசனங்கள் ஒன்றிணைந்துள்ளன.

உலக யோகா தினம் இம்மாதம் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி வரும்16ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில்.யோகத்தான் தொடர் சூரிய நமஸ்காரம் என்ற நிகழ்ச்சியை சேரா யோகமந்திரம் என்ற அமைப்பினர் நடத்த உள்ளனர்.

Surya Namaskar Yogathon in Chennai Nehru Stadium on June 16

யார் பங்கேற்கலாம்

இதில் 8வயது முதல் 50 வயது மேற்பட்ட சூரிய நமஸ்காரம் செய்ய பயிற்சி உடையவர்கள் வரை பங்கேற்கலாம். இதில் 12படி நிலைகளை சுற்றாக கொண்ட சூரிய நமஸ்காரத்தை 30.50 மற்றும்108 சுற்றுக்கள் என மூன்று பிரிவுகளில் செய்யும் வகையில் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது இதற்கான பெயர் பதிவு வரும் 13ஆம் தேதி வரை நடைபெறும்.

சூரிய நமஸ்காரம்

சூரிய நமஸ்கார பயிற்சியினால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி நடைபெறுவதால் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இதனால் இருதய பாதிப்பு நேர்வதும் தவிர்க்கப்படுகிறது. நுரையீரல், குடல், சிறுநீரகம், தோல் முதலியவற்றிலிருந்து கழிவுப் பொருட்கள் சரியாக வெளியேற உதவுகிறது. ரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது. மலச்சிக்கல் அஜீரணம் மற்றும் வயிற்றில் வாயுவினால் உண்டாகும் கோளாறுகளை விரைவில் நீக்கி ஜீரண சக்தியை மிகச் செய்கிறது.

Surya Namaskar Yogathon in Chennai Nehru Stadium on June 16

ஆரோக்கியம் அதிகரிக்கும்

உடல் உறுப்புகளின் செயல்களை சீராக்கி உடலை ஆரோக்கியமாக வைக்கிறது

எனவே உணவில் உள்ள சத்துக்கள் நன்றாக உறிஞ்சப்பட்டுகிறது.

உடல் நலம் பெறுவதோடு மனநலமும் பெற்று மன சம்பந்தப்பட்ட மன அழுத்தம். மன உளைச்சல் இன்றி மன அமைதி பெற உதவும்

‌மேலும் சர்க்கரை நோய். இரத்த அழுத்தம்.இரத்த சோகை, நரம்பு தளர்ச்சி, கண் பார்வை குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளிலிருந்து தீர்வு அளிக்கிறது.

Surya Namaskar Yogathon in Chennai Nehru Stadium on June 16

பதிவு செய்யலாம்

உடல் நலம் மன நலம் தரும் யோகாவை அனைவரும் கற்று பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பங்கேற்க விரும்புவோர் 7010054452,8939131805,

‌ஆகிய கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெயரை பதிவு செய்யலாம்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Yogathon Event on 16th June 2019 at Jawaharlal Nehru Stadiumfrom 06:30am to 08:30am.Practice Suryanamaskar 108 times and reward yourself with a great mind and body.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more