சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சரியான தருணம்.. வா தலைவா.. அரசியலுக்கு அஜித்தை அழைக்கும் சுசீந்திரன் #அரசியல்வேண்டாம்அஜித்தேபோதும்

Google Oneindia Tamil News

சென்னை: அரசியலே வேண்டாம் எனும் நடிகர் அஜித்தை வா தலைவா என இயக்குநர் சுசீந்திரன் அரசியலுக்கு அழைக்கிறார். #அரசியல்வேண்டாம்அஜித்தேபோதும் என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரென்டாகி வருகிறது.

தல என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் அஜித். இவரது திரைப்படங்களில் சிறிதளவும் அரசியலை விரும்ப மாட்டார். ஆனால் மிகவும் தைரியசாலி.

கருணாநிதி கலந்து கொண்ட ஒரு விழாவில் தன்னை கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என கட்சி நிர்வாகிகள் மிரட்டல் விடுவதாக கருணாநிதி முன்பே தைரியமாக உரைத்தவர். இந்த நிலையில் மோடியின் திட்டங்களை ரசிகர்களுக்கு அஜித் சொல்ல வேண்டும் என தமிழிசை சவுந்திரராஜன் அறிக்கை வெளியிட்டார்.

மொத்தம் 100 பெண்கள்.. சபரி மட்டும் 60 பேரை நாசம் பண்ணி இருக்கான்.. திருநாவுக்கரசு வாக்குமூலம் மொத்தம் 100 பெண்கள்.. சபரி மட்டும் 60 பேரை நாசம் பண்ணி இருக்கான்.. திருநாவுக்கரசு வாக்குமூலம்

அஜித்

அஜித்

இந்த அறிக்கை வெளியாகி ஒரு நாள் கூட முழுமையடையாத நிலையில் அஜித்குமார் ஒரு பரப்பான அறிக்கையை வெளியிட்டார். அதில் எனக்கும் அரசியல் கட்சிக்கும் எந்த தொடர்பு இல்லை என அஜித் வெளியிட்டார். இது பாஜகவுக்கு கடும் அவமானத்தை ஏற்படுத்தியது.

ரசிகர்கள்

இந்த நிலையில் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கி 40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் தேர்வை நடத்தி வருகிறார். இதனால் அவர் மீது எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதுபோல் விஜய், அஜித், சிம்பு ஆகியோர் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே அவரவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

40 ஆண்டுகால

40 ஆண்டுகால

இதனிடையே இயக்குநர் சுசீந்திரன், நடிகர் அஜித்குமாரை அரசியலுக்கு வருமாறு அழைத்துள்ளார். அவர் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் 40 ஆண்டு கால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன் கருதி, உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100% சரியான தருணம். வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு.. உங்களுக்காக காத்திருக்கும் பலகோடி மக்களில் நானும் ஒருவன்.

பதில்

பதில்

இந்த நிலையில் அவரது ரசிகர்ளோ எங்களுக்கு அஜித் ஒருவரே போதும். அவர் அரசியலுக்கு வர வேண்டாம் என பதில் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து சுசீந்திரனின் ட்விட்டத்தை தொடர்ந்து அஜித் ரசிகர்கள், #அரசியல்வேண்டாம்அஜித்தேபோதும் என்று ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்துவருகின்றனர். தங்களது தல விரும்பாத எதையும் தாங்கள் விரும்ப வில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

English summary
Director Suseendran invites Ajithkumar to come to Politics. Ajith already made clear that he is not willing to come to politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X