சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மர்ம முடிச்சு.. சுஷாந்தின் "ஸ்டேரி நைட்ஸ்" கவர் போட்டாவாக "அதை" ஏன் வைத்தார்.. முன்பே எடுத்த முடிவா?

சுஷாந்த் தற்கொலையை முன்கூட்டியே உணர்ந்தாரா என தெரியவில்லை

Google Oneindia Tamil News

சென்னை: சுஷாந்த் தன் மரணத்தை முன்கூட்டியே முடிவு செய்துவிட்டார் போலும்.. அவருடைய ட்விட்டர் பக்கத்தில் உள்ள கவர் போட்டோ ஓவியமாக இதனை சுட்டிக்காட்டுகிறது.

சுஷாந்தை நினைத்தால் ரொம்ப ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.. நேற்றில் இருந்து இந்த மரண செய்தியில் இருந்து மீளமுடியவில்லை.

குறிப்பாக தமிழக மக்களையும் இந்த மரணம் தாக்கி உள்ளது வியப்பாக உள்ளது.. ஒரு இந்தி நடிகர் என்பதையும் தாண்டி எத்தனை பேர் இவரை விரும்பு உள்ளனர் என்பது இப்போதுதான் பகிரங்கமாக தெரிகிறது.. தோனி படத்தில் நடித்தார் என்பதால் மட்டுமல்.. அடிப்படையிலேயே சுஷாந்த் நல்ல மனிதராக இருந்திருக்கிறார்.

பெண் மேனேஜர் தற்கொலைக்கும் சுஷாந்த் சிங் மரணத்திற்கும் தொடர்பா? என்ன நடந்தது?.. போலீஸின் விளக்கம்!பெண் மேனேஜர் தற்கொலைக்கும் சுஷாந்த் சிங் மரணத்திற்கும் தொடர்பா? என்ன நடந்தது?.. போலீஸின் விளக்கம்!

ஃபாலோயர்கள்

ஃபாலோயர்கள்

தன்னுடைய ஆசைகள் என்று இவர் குறித்து வைத்துள்ள அந்த 50 விஷயங்களே அதற்கு சாட்சி.. இத்தனை லட்சம் ஃபாலோயர்களை வைத்துள்ளவர், ஒருவரிடம்கூடவா மனசுவிட்டு பேச முடியாமல் போய்விட்டது? அப்படி என்னதான் பிரச்சனை இவருக்கு? எதுவுமே புரியவில்லை.

Recommended Video

    Sushant Singh Rajputன் நிறைவேறாத ஆசைகள்
    அரங்கேற்றம்

    அரங்கேற்றம்

    ஆனால் தீர்க்கமாக முடிவு செய்துதான் இந்த தற்கொலையை அரங்கேற்றி உள்ளார்.. கடைசி விருந்து ஏன் வைத்தார்? நெருங்கியவர்களை ஏன் அழைத்தார்? பதட்டம், பரபரப்பு, டென்ஷன், ஆவேசம், ஆத்திரம் என எதுவுமே இல்லாமல் நிதானமாக எப்படி தற்கொலை செய்ய முடிந்தது இவரால் என தெரியவில்லை.

    ஐ லவ் யூ

    ஐ லவ் யூ

    போனவாரம் தன்னுடைய அம்மா போட்டோவை பகிர்ந்து ஐ லவ் யூ சொல்லி உள்ளார்.. இவரது ட்விட்டர் ப்ரொபைலில் ஒரு ஓவியம் உள்ளது.. இதை பார்ப்பவர்களுக்கு இது என்ன என்று டக்கென புரியாது. இந்த ஓவியத்தை வரைந்தவர் உலக புகழ்பெற்ற வின்சென்ட் வான்கா. இவரை பற்றி ஒரு சின்ன சுருக்கம்:

    வான்கா

    வான்கா

    1850-களில் வாழ்ந்தவர் வான்கா.. டச்சு நாட்டை சேர்ந்தவர்.. கண்ணெதிரே கூலி தொழிலாளர்களின் அவலங்களையும், படும் பாடுகளையும் ஓவியமாக தீட்டியவர்.. ஆனால் வான்கா வரைந்த ஓவியத்தை யாருமே அப்போது கண்டுகொள்ளவே இல்லை.. ஒருத்தரும் மதிக்கவில்லை... அவரை பைத்தியம் என்று கேலி செய்தனர். சமூகம் அவரை அவமானப்படுத்தியது.. உயிருக்குயிராக விரும்பிய காதலிகூட நிராகரித்தாள்.. அந்த காதலி கேட்டாள் என்பதற்காக தன் காதை அறுத்து தந்தவர் வான்கா.

    அவமானம்

    அவமானம்

    கடைசிவரை யாருமே அவரை புரிந்து கொள்ளவில்லை. அளவுக்கு அதிகமான விரக்தி, மனவேதனை, காதல் தோல்வி, அவமானத்தினால் தன்னுடைய 37-ம் வயதில் அதாவது 1890-ம் ஆண்டு ஜூலை 27-ம் நாள் வான்கோ துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அதுவும் தன் வயிற்றில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். இவர் உயிரோடு இருக்கும்போது, அவரை உதாசீனப்படுத்திய இதே உலகம் அந்த ஓவியத்தை தூக்கி வைத்து கொண்டு கொண்டாடியது.. ஒவ்வொரு ஓவியமும் உயிர்பெற்று கண்முன்னே நடந்து போனதை கண்டு அதிசயித்து மக்கள் நின்றனர்!!

    சிறந்த ரசிகர்

    சிறந்த ரசிகர்

    இந்த வான்காவின் புகழ்பெற்ற "ஸ்டேரி நைட்ஸ்" என்ற ஓவியத்தைதான் சுஷாந்த் புரொபைல் படமாக வைத்துள்ளார்.. இவர் ஒரு மிகச்சிறந்த கலாப்பூர்வ ரசிகராக இருந்திருக்கிறார் என்பதற்கு இதுவே சாட்சி.. அதேசமயம் இந்த தற்கொலையை திட்டமிட்டுதான் செய்திருக்கிறாரோ என்ற சந்தேகமும் வலுவாக எழுந்துள்ளது.

    என்ன காரணம்?

    என்ன காரணம்?

    ஆனால் எதற்காக கவர் படம் வைத்தார்? வான்கா போலவே காதல் தோல்வியா? அங்கீகாரம் போதவில்லையா? வெளியே சொல்ல முடியாத அளவுக்கு பிரச்சனையில் சிக்கி இருந்தாரா? எதுவுமே தெரியவில்லை.. ஆனால் அவர் யார்கிட்டயாவது பேசியிருந்திருக்கலாம்.. அப்படி பேசியிருந்தால் அந்த கடினமான நிமிடத்தை கடந்திருக்க மாட்டார்!!

    தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ கீழே உள்ள 24 மணி நேர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்:

    சினேகா தற்கொலை தடுப்பு மையம்- 044- 2464 0050

    மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம்- 104- ஐ அழைக்கலாம்.

    English summary
    Sushant Singh Rajput: sushants twitter profile picture
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X