சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தோட்டத்தில் மர்மம்.. ஓடிய சிவாஜி.. ஒரே ரூமில் எம்ஜிஆர் - எம்.ஆர். ராதா.. நடிகர் ராதாரவி பரபர பேட்டி

எம்ஜிஆரை எம்ஆர் ராதா ஏன் சுட்டார் என ராதாரவி ஒரு பேட்டியில் பதிலளித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: எம்ஆர் ராதாவை, எம்ஜிஆர் ஏன் சுட்டார் என்ற கேள்விக்கு, நடிகர் ராதாரவி நேற்று அளித்துள்ள பேட்டி ஒன்று, இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது..!!!

எம்ஜிஆர் - சரோஜா தேவி நடிப்பில் வெளியான, பெற்றால்தான் பிள்ளையா படத்தை எம்ஆர் ராதாவின் நண்பர் வாசு தயாரித்திருந்தார். படத் தயாரிப்பின்போது அவருக்குப் பணக் கஷ்டம் ஏற்பட்டதாகவும், அப்போது எம்ஆர் ராதா அவருக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்து உதவியதாகவும் தெரிகிறது.

படத்தின் ரிலீஸுக்குப் பிறகு வாசுவிடம் எம்.ஆர்.ராதா பணம் கேட்டதாகவும், ஆனால் பட வெளியீட்டில் கைக்கு மீறி செலவாகிவிட்டதாக அவர் பதில் சொன்னதாகவும் சொல்லப்படுகிறது.

சசிகலா விசிட்- சேலத்தில் பரபர- எம்ஜிஆர், ஜெ. சிலைகளை நெருங்க விடாமல் இபிஎஸ் கோஷ்டி போலீசில் புகார்சசிகலா விசிட்- சேலத்தில் பரபர- எம்ஜிஆர், ஜெ. சிலைகளை நெருங்க விடாமல் இபிஎஸ் கோஷ்டி போலீசில் புகார்

 ராமாவரம் தோட்டம்

ராமாவரம் தோட்டம்

படத்தின் ரிலீஸுக்கு முன்பு, கூடுதலாக சில காட்சிகளை எம்ஜிஆர் சேர்க்க சொன்னதால் கூடுதல் செலவானதாகவும் வாசு எம்ஆர் ராதாவிடம் சொல்லியிருக்கிறார். இதுகுறித்து எம்.ஜி.ஆரிடம் பேசுவதற்காக ராமாவரம் தோட்டத்தில் இருந்த அவரின் வீட்டுக்கு ராதாவும் வாசுவும் போயிருக்கிறார்கள். பண விவகாரம் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டு, எம்ஆர் ராதா, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் எம்ஜிஆரை நோக்கி சுட்டதாக தெரிகிறது.

 தோட்டத்தில்...

தோட்டத்தில்...

இதில், காதை உரசிக் கொண்டு சென்ற துப்பாக்கிக் குண்டு, எம்ஜிஆரின் தொண்டையில் பாய்ந்திருக்கிறது. பிறகு, துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு எம்ஆர் ராதா தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். 2 பேரும் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தனர்.. ஆனாலும் இவர்கள் ஏன் சுட்டுக் கொண்டார்கள் என்பது இன்றுவரை ஒரே மர்மமாகவே இருக்கிறது.. தொழில் போட்டி என்றார்கள்.. பொறாமை என்றார்கள்.. எம்ஜிஆரால் காமராஜருக்கு ஆபத்து என்று கருதியதால், எம்ஆர் ராதா அவரை சுட்டதாக சொன்னார்கள்.. இந்த மர்மம் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ராதாரவி

ராதாரவி

இந்நிலையில், ஒரு தனியார் சேனலுக்கு நடிகர் ராதாரவி ஒரு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில், இதே துப்பாக்கி சூடு பற்றி கேட்கப்பட்டது.. அதற்கு அவர் அளித்த பதில் இதுதான்: "எனக்கு அப்போ 14 வயசு இருக்கும்.. என் அம்மா தனலட்சுமி ரொம்ப ஸ்டிராங் லேடி.. அப்பாவை சுட்டுட்டாங்கன்னு வாட்ச்மேன் ஓடிவந்து சொன்னான்.. ஒரே ரத்தம், ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்காங்கன்னு சொன்னாங்க.. அங்கே போனால், எம்ஜிஆர் ரசிகர்கள் ரகளை பண்ணிட்டு இருந்தாங்க.. அதனால், நாங்க சுவர் ஏறி குதிச்சுதான் உள்ளே போய் பார்த்தோம்..

 சிவாஜி + ட்ரீட்மென்ட்

சிவாஜி + ட்ரீட்மென்ட்

அண்ணே என்று கத்திக்கொண்டே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஓடிவந்தார்.. அப்பறம் ஒருநிமிஷம் அவரே ஷாக் ஆயிட்டாரு.. ஏன்னா, ஒரே ரூமில் 2 பேரும் படுக்க வெச்சிட்டு இருந்ததை அவரே எதிர்பார்க்கவில்லை.. ஒரே ரூமில் ட்ரீட்மென்ட் நடக்குது.. 2 பேருக்கும் நடுவில் ஒரே ஒரு ஸ்கிரீன் மட்டும் இருந்தது.. எம்ஜிஆருக்கு ஒரு அடிதான்.. ஆனால் என் அப்பாவுக்கு 2 குண்டடி.. ஆனாலும் உட்கார்ந்து பேசிட்டு இருக்கார்.. அந்த நேரத்தில் மட்டும் என் அப்பா பேசாமல் இருந்திருந்தால், உடனே அரெஸ்ட் பண்ணியிருக்க மாட்டாங்க.. கொஞ்ச நாள் கழித்து அரெஸ்ட் பண்ணியிருப்பாங்க..

 எம்ஜிஆர்

எம்ஜிஆர்

என் அப்பா தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை கிடையாது.. இதையே சட்டப்படி பார்த்தால், துப்பாக்கியில் சுட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்திருந்தால், அவரது மண்டை தெறிச்சிருக்கும்.. 2 இடத்துல குண்டடி பட்டுள்ளது.. தற்கொலை என்றால், முதலில் நெற்றியில் சுட்டுக்கொன்றபோதே இறந்திருப்பாரே? எப்படி 2வது முறை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயற்சி செய்வார்? எம்ஜிஆரிடம் இருந்து எடுக்கப்பட்ட தோட்டா என் அப்பா உடையதுதான்.. அதுக்கு நம்பர் இருக்கு.. ஆனால், எங்க அப்பாவிடம் இருந்து எடுக்கப்பட்ட தோட்டா நம்பர்? ஆட்சிகள் மாறின.. காட்சிகளும் மாறின..

 எம்ஆர் ராதா

எம்ஆர் ராதா

என் அப்பா வாக்குமூலம் தருகிறார் "எம்ஜிஆர் என்னை சுட்டுட்டாரு.. நானும் சுட்டுட்டேன்" என்று சொல்கிறார்.. எதுக்காக என் அப்பா அவரை சுட்டுட்டாரு என்று எனக்கு இப்போதுவரை தெரியாது.. 2 பேருமே நெருங்கிய நண்பர்கள்.. அவங்களுக்குள்ளேயே ஏதோ சண்டை.. சுட்டுக்கிட்டாங்க.. சுடப்படும்போது தயாரிப்பாளர் வாசு, எம்ஜிஆர், எம்ஆர் ராதா.. இவங்க 3 பேர் தான் இருந்தாங்கன்னு சொல்றாங்க.. அதனால் இவங்க 3 பேருக்கும்தான் உண்மையான காரணம் தெரியும். மற்றவர்கள் யார் எது சொன்னாலும் அது கற்பனைதான்" என்கிறார் ராதாரவி.

 புருஷன் + பொண்டாட்டி

புருஷன் + பொண்டாட்டி

நடிகவேள் எம்ஆர் ராதாவிடமே இதை பற்றி ஒருமுறை கேள்வி எழுப்பப்பட்டது.. எம்ஜிஆரை சுட்டது குறித்து ஜெயிலில் இருந்து விடுதலையான பிறகு, மலேசியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எம்ஆர்ராதா பேசினார். "ராமச்சந்திரனும் நானும் நண்பர்கள். 50 வருஷமா சிநேகிதம்.. ரெண்டு பேரும் தமாஷா சுட்டுக்கிட்டோம்.. ஏன் சுட்டுக்கக் கூடாதா? பொண்டாட்டியும் புருஷனும் அடிச்சுக்கலையா? அப்பனும் மவனும் வெட்டிக்கலையா? அதே மாதிரி ரெண்டு நண்பர்கள் அடிச்சிக்கிட்டோம். அவ்வளவுதான். கையில் கம்பிருந்தா கம்பை எடுத்து அடிச்சிக்குவோம். கத்தி இருந்தா, கத்தி எடுத்து அடிச்சிக்குவோம். ரிவால்வர் இருந்துச்சு... அந்த நேரத்துல. எடுத்து அடிச்சிக்கிட்டோம். அடிச்சதும் "டப்பு... டப்பு"ன்னது. நிறுத்திட்டோம்.

 மர்ம முடிச்சுகள்

மர்ம முடிச்சுகள்

நாங்க என்ன ஒருத்தரை ஒருத்தர் கொன்னு போடணும்னா சுட்டுக்கிட்டோம்? ரிவால்வரில் 8 தோட்டா இருக்கு. அப்படி விரோதமா இருந்தா, 8 தோட்டாவையும் பயன்படுத்தி இருப்போம். ஒரு தோட்டாதான் ஆச்சு. வெடிக்குதா வெடிக்கலையானு பார்த்தோம். அது வெடிச்சிருச்சு. அதுக்கு நம்ம என்ன செய்றது... இதெல்லாம் புரியாம ரொம்பப் பேர் தவறா பேசுறாங்க! பெரியார் இறந்தபோது நாங்க 2 பேரும் பக்கத்துல இருந்து பேசிக்கிட்டோம். ராமச்சந்திரனுக்கு என்னிடத்திலே நல்ல மரியாதை உண்டு" என்றார். ஆக, ராதாரவி சொல்வது போல் இன்றுவரை கற்பனை + மர்மமாகவே இந்த விஷயம் நீடித்து வருகிறது என்றாலும், உண்மையிலேயே எம்ஜிஆரை ஏன் சுட்டார் எம்ஆர் ராதா???

English summary
Suspense: why Actor MR Radha shoot MGR and what happened in Ramavaram Thottam, says Radharavi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X