• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஆம்.. இரவிலும் உயிர்த்து கொண்டிருக்கிறது போராட்டம்.. இது எங்களோடு முடிய போவதுமில்லை: சு.வெங்கடேசன்

Google Oneindia Tamil News

சென்னை: "போராடி பழிவாங்கப்பட்டிருக்கும் எங்கள் சகாக்களோடு உடனிருக்கிறோம். நாடாளுமன்ற வளாகத்தில் விடாது முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்தின் போது இந்திய விடுதலையின் வீர நட்சத்திரம் மாவீரன் பகத்சிங் கூறியது நினைவிற்கு வருகிறது. ஆம் " இந்தப் போர் எங்களால் துவங்கப்படவுமில்லை ; எங்களோடு முடியப் போவதுமில்லை" என்று மதுரை எம்பி வெங்கடேசன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

3 வேளாண் மசோதா சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தும், விவசாயிகள் ஆறுதல் அடையவில்லை.. தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாராளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. முதல் நாளில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா இரு அவையிலும் நிறைவேற்றப்பட்டது.

மாண்பு

மாண்பு

விவாதமின்றி இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதால் தொடக்க நாளிலேயே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதற்கிடையே மழைக்கால கூட்டத்தொடரில் அவை மாண்பை சீர்குலைத்ததற்காக மேல் சபையை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இந்த சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்யக்கோரி, காந்தி சிலை முன்பு கருப்புப்பட்டை அணிந்து போராட்டத்திலும் இறங்கியது முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.

 போராட்டம்

போராட்டம்

இந்நிலையில், மதுரை எம்பி சு.வெங்சடேசன் ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.. அதில் உள்ளதாவது: உழவர் விரோத சட்டங்களை ஒன்றிய அரசு அவையில் தாக்கல் செய்து நிறைவேற்றிய நள்ளிரவில் அவைக்குள் ஏறிய உஷ்ணம் நாடெங்கும் பரவியது நாம் கண்டது தான். சட்டத்தை முன்மொழிந்தவர்கள் அவர்களின் பதவிவிலகலையும் சேர்த்து முன்மொழிந்தது தான் நாம் நாடெங்கும் பார்த்த ஆவேசப் போரின் முன்னோட்டம்.

 பொய் குற்றச்சாட்டு

பொய் குற்றச்சாட்டு

அப்போது மக்கள் விரோத சட்டங்கள் எவற்றையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விட மாட்டோம் என உரத்துக் குரல் கொடுத்தோம். மாநிலங்களவையில் எங்கள் சகாக்கள் அவர்களோடு நேருக்கு நேர் நின்றார்கள். நேரே நிற்பவர்களை அவர்களுக்கு எப்போதும் பிடிக்காது. பொய்க்குற்றச்சாட்டுகளில் வெளியேற்றி இடைநீக்கம் செய்தார்கள். அதற்கடுத்த நாட்களின் இரவுகள் நாடாளுமன்ற வளாகம் போர்கோலமானது. சொன்ன நாளுக்கு முன்பே அவையை முடித்துக் கொண்டு ஓடினார்கள்.

 நெருப்பு பற்றி விட்டால்?

நெருப்பு பற்றி விட்டால்?

அவையை முடித்து ஓடியவர்களின் வழிகளை சிங்கு எல்லை உட்பட எல்லா எல்லைகளையும் மறித்து நிறுத்தியது உழவர் கூட்டம். நெருப்பு பற்றி விட்டால் நிறுத்தமுடியுமா ? உழது அழுத்தவர்களின் உற்ற தோழர்களாக உடன்பட்டு நின்றோம். எல்லையில்லாத ஏளனங்களையும், ஆயிரக்கணக்கான அவதூறுகளையும், நூற்றுக்கணக்கான உயிர்பலியையும் சந்தித்த பின்னும் உறுதியோடு நின்றது உழவர் கூட்டம். வருடம் ஒன்றானது.

ஒப்புதல்

ஒப்புதல்

அதற்கு பின்னான அரசியல் நிகழ்வுகள் ஒன்றிய அரசினை அஞ்ச வைக்கும் மாற்றங்களை கொடுத்தது. பதைபதைத்த நெஞ்சங்களையும் நம்பிக்கை கொண்டு உழுதது இந்திய உழவர் கூட்டம். உரமிக்க போராட்டமும் , தீர்க்கமான முடிவுளும் உழவர் விரோத சட்டங்களை திரும்பப்பெற வைத்தது. அதன் சட்ட வரைவினை ஒப்புதலுக்கு உள்ளாக்கும் இந்த கூட்டத்தொடரில் விவாதமே இன்றி தெறித்து ஓடியது ஒன்றிய அரசு. இப்போதும் நேருக்கு நேராய் சமர் புரிந்து கொண்டிருக்கிறோம். சட்டத்தை திரும்பப்பெற்று சனநாயகக் கண்ணீர் வடித்தவர்கள் அதற்காய் போராடிய எங்கள் சகாக்களை மீண்டும் இடைநீக்கம் செய்துள்ளனர்.

 உழவர் கூட்டம்

உழவர் கூட்டம்

வீதிகளின் முழக்கம் ஓயப்போவதில்லை. இந்த வீணர்களுக்கு எதிரான எங்கள் முழக்கம் ஓய்ந்து விடுவதில்லை. போரின் போது நம் நிலையை தெரிவிப்பதே நலம். இது உண்மைகளுக்கு ஆதரவான போர். 75 ஆண்டு ஜனநாயக மரபையும், சுதந்திரத்தையும் காக்கும் போர். இன்றைய இரவிலும் உயிர்த்துக் கொண்டிருக்கிறது எங்கள் சகாக்களின் போராட்டம். உண்மையின் உடனிருப்பதே நாங்கள் செய்துகொண்ட உடன்பாடு. உண்மையின் உடன் இருப்பதே அறம். ஓராண்டாய் இந்தியச் சாலைகளில் போராடிய உழவர் கூட்டத்தோடு ஒன்றாயிருந்தோம்.

 முடிய போவதில்லை

முடிய போவதில்லை

இன்று அதற்காய் போராடி பழிவாங்கப்பட்டிருக்கும் எங்கள் சகாக்களோடு உடனிருக்கிறோம். நாடாளுமன்ற வளாகத்தில் விடாது முன்னெடுக்கப்படும் இந்தப்போராட்டத்தின் போது இந்திய விடுதலையின் வீர நட்சத்திரம் மாவீரன் பகத்சிங் கூறியது நினைவிற்கு வருகிறது. ஆம் " இந்தப் போர் எங்களால் துவங்கப்படவுமில்லை ; எங்களோடு முடியப் போவதுமில்லை" என்று தெரிவித்துள்ளார்.

English summary
Suspension of 12 rajya sabha MPs AND Madurai MP Su Venkatesans statement
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X