சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நெல்லை.. கோவைக்கு தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள்.. தென்மாவட்ட மக்களுக்கு நல்ல செய்தி

Google Oneindia Tamil News

சென்னை: பொதிகை, நெல்லை விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படுவதற்கு பதில் சென்னை எழும்பூரில் இருந்து நாளை (4.3.2019) முதல் புறப்படும் என அறிவித்துள்ளது. இதேபோல் திருநெல்வேலி மற்றும் கோவைக்கு சிறப்பு ரயில்களையும் அறிவித்துள்ளது.

பொதிகை மற்றும் நெல்லை விரைவு ரயில்கள் இதுவரை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செல்கிறது.

இதனால் அந்த ரயில்கள் மூலம் சென்னை வரும் மக்கள் லோக்கல் ரயிலில் மாறி ஏறி மீண்டும் ஒரு மணி நேரம் தாமதமாக சென்னை வருகிறார்கள்.

தாம்பரத்தில்

முன்னதாக இந்த இரண்டு ரயில்களுமே சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டவை தான். இடப்பற்றாக்குறை காரணமாக எழும்பூரில் இருந்து தாம்பரத்திற்கு மாற்றப்பட்ட இருந்தன.

பொதிகை நெல்லை

இந்நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று பொதிகை மற்றும் நெல்லை விரைவு ரயில்கள் புதன்கிழமை (4.12.2019) முதல் சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்பட உள்ளது. அதேபோல் மறுமார்க்கமாக பொதிகை மற்றும் நெல்லை விரைவு ரயில்கள் தாம்பரம் வரை இல்லாமல் சென்னை எழும்பூர் வரை இன்று முதல் இயக்கப்படுகிறது..

திருநெல்வேலிக்கு

இது ஒருபுறம் எனில் தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு டிச.23ம் தேதி மாலை 6.45க்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதேபோல் தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு பொங்கலையொட்டி ஜனவரி 13ம் தேதி மாலை 6.45க்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை (4.12.2019) தொடங்குகிறது.

தாம்பரத்தில் இருந்து

இதேபோல் தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு பொங்கல் பண்டிகையையொட்டி வரும் ஜனவரி 10ம் தேதி இரவு 7.15க்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மேலும் தாம்பரம்-கோவை இடையே ஜன.14ஆம் தேதி மாலை 6 மணிக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களுக்கான முன்பதிவும் நாளை காலை (4.12.2019) தொடங்குகிறது.

English summary
Southern Railway announced Suvidha special trains to comibatore and Tirunelveli from Tambaram
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X