சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டுவிட்டரை ஹேக் செய்து முருகனுக்கு எதிராக சாதி வெறியை தூண்டும் பதிவு.. எஸ் வி சேகர் போலீசில் புகார்

Google Oneindia Tamil News

சென்னை: தன் டுவிட்டர் ஹேக் செய்து பாஜகவின் புதிய தலைவர் முருகனுக்கு எதிராக சாதி வெறியை தூண்டும் வகையில் பதிவிட்டுள்ளார்கள் என்றும் அந்த விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜகவைச் சேர்ந்த எஸ் வி சேகர் சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளித்துள்ளார்,

தமிழக பாஜக தலைவராக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் எல் முருகனை நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உத்தரவிட்டுள்ளார். திராவிட சிந்தாந்த அரசியலுக்கு தலைவர தலைவரான முருகனை முன்னிறுத்துவது திராவிட கட்சிகளுக்கு சவாலாக இருக்கும் என்று கருதி பாஜக தலைமை அவரை நியமித்துள்ளது.

sv sekar complaint in chennai police commissioner office over his twitter account hacked

இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்தவரும் நடிகருமான எஸ்.வி.சேகரின் டுவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து அதில் பாஜக தலைவர் முருகனுக்கு எதிராக சாதி வெறியை தூண்டும் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையரிடம் எஸ்.வி சேகர். புகார் அளித்துள்ளார்.

sv sekar complaint in chennai police commissioner office over his twitter account hacked

தனது டுவிட்டர் அக்கவுண்டை ஹேக் செய்து சாரி வெறியை தூண்டும் பதிவினை வெளியிட்ட விஷமிகளை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனிடையே சென்னை போலீஸ் கமிஷ்னருக்கு அனுப்பிய கடிதத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் எஸ்வி சேகர் பதிவிட்டுள்ளார்.

English summary
sv sekar complaint in chennai police commissioner office over his twitter account hacked and post against new bjp leader murugan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X