சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இவரு சொந்த காசில் சூன்யம்.. அவரு காதில் சொல்ல வேண்டியதை மைக்போட்டு சொல்லிட்டாரு.. எஸ்வி சேகர் தாக்கு

Google Oneindia Tamil News

சென்னை: கமல்ஹாசன் சொந்த காசில் சூன்யம் வைத்துக்கொண்டதாக தமிழக பாஜக நிர்வாகியான எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.

அரவக்குறிச்சி தொகுதியில் நேற்று முன்தினம் பிரச்சாரம் செய்த நடிகர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நாதுராம் கோட்சே குறித்து பேசினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

SV Shekar reaction for Kamal speech

கமல்ஹாசனின் பேச்சுக்கு பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அதேநேரத்தில் காங்கிரஸ், திக உள்ளிட்ட கட்சிகள் கமல்ஹாசன் பேசியதில் எந்த தவறும் இல்லை என கூறி ஆதரவு தெரிவித்தன.

இதுதொடர்பாக கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் அவரது கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வருக்கு பிறந்த நாள்.. 4 அமைச்சர்கள்தான் வாழ்த்தினார்களாமே.. பரபரக்கும் அதிமுகமுதல்வருக்கு பிறந்த நாள்.. 4 அமைச்சர்கள்தான் வாழ்த்தினார்களாமே.. பரபரக்கும் அதிமுக

இந்நிலையில் கமல்ஹாசனின் பேச்சு தொடர்பாக தமிழக பாஜக நிர்வாகியான எஸ்வி சேகர் டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, கமல் ஹாசன் சொந்த காசில் சூன்யம்.. வீரமணி காதில் சொல்ல வேண்டியதை மைக் போட்டு சொல்லிட்டாரு. அரசியல் விஷம். இவ்வாறு எஸ்வி சேகர் தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.

பிரச்சாரத்தின் போது நடிகர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும் அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றும் கூறியிருந்தார். கமலின் பேச்சு தொடர்பாக கருத்து கூறிய திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி, கமல் பேசியதில் எந்த தவறும் இல்லை என்றார். அவர் சொன்னது சரிதான் என்றார். இந்நிலையில் கி வீரமணி காதில் சொல்ல வேண்டியதை மைக் போட்டு சொல்லிவிட்டதாக கூறியுள்ளார் எஸ்வி சேகர்.

English summary
SV Shekar has twitted about Kamalhassan and K Veeramani. Kamal has said The first terrorist of the nation is a Hindu and his name is Nathuram Godse.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X