சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"மான ரோஷம் நல்ல காமெடி.. ஜெயலலிதா காலில் நான் விழுந்ததே இல்லை".. எஸ்.வி.சேகர் தடாலடி

ஜெயகுமாருக்கு எஸ்வி சேகர் பதிலடி தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "மான ரோஷம், நல்ல காமெடி" என்று கூறி சிரித்துள்ள நடிகர் எஸ்.வி.சேகர், அமைச்சர் ஜெயக்குமாருக்கு பதில் தரும் வகையில் புதிதாக 2 டிவீட் போட்டு விட்டுள்ளார்.

Recommended Video

    திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி S.V.Sekhar சர்ச்சை பேச்சு

    சிரிப்பு நடிகர் எஸ்.வி. சேகர் அவ்வப்போது படு பகிரங்கமாக பலரையும், பல விஷயங்களையும் விமர்சிப்பது வழக்கம்தான். தடாலடியாக பேசி விடுவார். வார்த்தைகளையும் கொட்டி விடுவார். அதேசமயம், சொன்ன வார்த்தையைத் திரும்பப் பெறவும் மாட்டார். அதில் உறுதியாகவும் இருப்பார்.

    இப்போதும் அப்படித்தான் ஒரு அதிரடியைக் காட்டியுள்ளார். ஒரு வீடியோ போட்டிருந்தார் சேகர். அதில் அதிமுகவின் கொடியிலிருந்து அண்ணா படத்தை எடுத்து விடுங்கன்னு சொல்லியிருந்தார். அவ்வளவுதான் அதிமுகவில் கொதிப்பு வரும் என்று எதிர்பார்த்தால்.. ஜெயக்குமார் மட்டும்தான் கருத்துக் கூறியிருந்தார்.

    எஸ்வி சேகர் எந்த கட்சி? வழக்கு வந்தால் ஓடி ஒளிந்து கொள்பவர்தானே.. விட்டு விளாசிய எடப்பாடி பழனிச்சாமிஎஸ்வி சேகர் எந்த கட்சி? வழக்கு வந்தால் ஓடி ஒளிந்து கொள்பவர்தானே.. விட்டு விளாசிய எடப்பாடி பழனிச்சாமி

    ஜெயக்குமார்

    ஜெயக்குமார்

    வெட்கம் மானம் இருந்தால் அதிமுக சார்பில் எம்எல்ஏவாக இருந்தபோது பெற்ற சம்பளம், இப்போது அதற்காக வாங்கி வரும் ஓய்வூதியம் ஆகியவற்றை எஸ்.வி.சேகர் திரும்பத் தரட்டும் என்று ஜெயக்குமார் டபுள் ஸ்டிராங்காகவே காட்டம் காட்டியிருந்தார். இதற்கும் தற்போது எஸ்.வி.சேகர் பதிலடி கொடுத்துள்ளார். இந்த முறை டிவீட் மட்டும்தான்.. அதுவும் 2 டிவீட் போட்டுள்ளார்.

    ஜெயலலிதா

    ஜெயலலிதா

    "முதல் டிவீட்டில் இப்படிக் கூறியுள்ளார்... நான் ஒரு முறை கூட ஜெயலலிதா காலில் விழுந்ததில்லை. சசிகலாவை சந்தித்தது இல்லை. நான் விசுவாசியல்ல. நேர்மையானவன். 2 ஜோடி கால்களைத்தவிர முகத்தையே நிமிர்ந்து பார்க்காதவர்களுக்கு நான் என் கருத்தில் உறுதியாக இருக்கின்றேன். MGR JJ படத்தை அதிமுக கொடியில் போட முடியாது என சொல்வீர்களா."

    விமர்சனம்

    விமர்சனம்

    அதாவது ஜெயலலிதா காலில் தான் அதிமுகவினரைப் போல விழுந்ததில்லை என்று நேரடியாகவே குட்டியுள்ளார் எஸ்.வி.சேகர். அதேபோல அதிமுகவினர் ஜெயலலிதா காலில் விழுந்ததைத் தவிர வேறு எதையும் செய்ததில்லை என்றும் மறைமுகமாக விமர்சித்துள்ளார். தனது கருத்தையும் தான் திரும்பப் பெறப் போவதில்லை என்றும் சொல்லி விட்டார். அதை விட முக்கியமாக, ஜெயலலிதா, எம்ஜிஆர் படத்தைகொடியில் போடக் கூடாது என்று சொல்ல முடியுமா என்றும் அவர் தைரியமாகவே சவால் விட்டுள்ளார்.

    சம்பளம்

    சம்பளம்

    அவர் போட்டுள்ள இரண்டாவது டிவீட் இதுதான்.. "என் MLA சம்பளம், என் ஓயூதியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. அதிமுகவினால் அல்ல. என் சம்பளம் தவிர ஒரு பைசா கூட கமிஷனாக சம்பாதிக்காதவன் நான். அப்படி எத்தனை விசுவாசிகள் சொல்வீர்கள்!? யோசியுங்கள். புரியும். இல்லை அம்மாவின் ஆத்மா புரியவைக்கும். "மான ரோஷம்" நல்ல காமெடி" என்று கலாய்த்துள்ளார்.

    கண்டனம்

    கண்டனம்

    மொத்தத்தில் எஸ்.வி.சேகர் கேட்டுள்ள சுளீர் கேள்விகளுக்கு இந்த முறையும் ஜெயக்குமாரே பதில் சொல்வாரா அல்லது வேறு கண்டனங்கள் வந்து குவியுமா என்று இன்று தெரியும்.. காத்திருந்து பார்ப்போம்.

    English summary
    Sve.sekhar replied to minister jayakumar
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X