• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பிராமணர் மீது நம்பிக்கை இல்லாட்டி.. செத்தா நடுரோட்டுல போட்ருங்க.. மந்திரம் ஏன்.. எஸ்வி சேகர் பேச்சு

|

சென்னை: "தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பிராமணர்களாக இருக்கட்டும், ஒன்னே ஒன்னு ஞாபகம் வெச்சுக்குங்க.. ஆர்எஸ் பாரதி வீட்டிலேயோ, அல்லது பிராமணர்களை எதிர்த்து பேசுவர்கள் வீட்டிலேயோ நல்லது கெட்டது நடந்தால் எந்த பிராமணனும் பெண் எடுக்க மாட்டோம்-ன்னு சொல்லுங்க" என்று எஸ்வி சேகர் பரபரப்பான கருத்து ஒன்றினை பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார்.

திமுக, திகவின் பிராமண எதிர்ப்பு பிரச்சாரங்களை கண்டித்து நங்கநல்லூரியில் பிராமண சங்கங்கள் சார்பில், பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் நடிகர் எஸ்.வி.சேகர், பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ராஷ்ட்ரீய சனாதன சேவா சங்க நிறுவன தலைவர் எஸ்.ராமநாதன், உலக பிராமணர்கள் நல்வாழ்வு சங்க நிறுவன தலைவர் கே.சிவநாராயணன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

சலசலப்பு

சலசலப்பு

இந்த கூட்டம் மிக மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டு வருகிறது.. இதற்கு காரணம் எஸ்வி சேகரின் பேச்சு மட்டுமே! அதனால்தான் சோஷியல் மீடியாவில் இப்போதுவரை சலசலப்பில் மூழ்கடித்து வருகிறது "இந்துக்களுக்கும், இந்துக்களின் அங்கமாக விளங்கும் பிராமணர்களுக்கும் எதிராக பேசுபவர்களை கண்டிக்க வேண்டும்" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் இது பெரிய அளவில் பாதிப்பையோ, தாக்கத்தையோ ஏற்படுத்தவில்லை. ஆனால் எஸ்வி சேகரின் பேச்சுதான் சர்ச்சையாக வெடித்துள்ளது. அந்த பேச்சின் சுருக்கம் இதுதான்:

பிராமணர்கள்

பிராமணர்கள்

"ஆர்எஸ் பாரதியை கண்டிக்கிறோம்.. இதோ இங்கே இருக்கக்கூடிய பிராமணர்களாக இருக்கட்டும், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பிராமணர்களாக இருக்கட்டும், ஒன்னே ஒன்னு ஞாபகம் வெச்சுக்குங்க.. ஆர்எஸ் பாரதி வீட்டிலேயோ, அல்லது பிராமணர்களை எதிர்த்து பேசுவர்கள் வீட்டிலேயோ நல்லது கெட்டது நடந்தால் எந்த பிராமணனும் பெண் எடுக்க மாட்டோம்-ன்னு சொல்லுங்க.

நம்பிக்கை

நம்பிக்கை

அவங்க வீட்டில யாராவது செத்துட்டா மட்டும் நல்லா மந்திரம் சொல்லுன்னு சொல்றே? ஏன்? உனக்குதான் நம்பிக்கை கிடையாதே.. இழுத்து ரோட்டுல போட்டுட வேண்டியதுதானே? கார்ப்பரேஷன் தூக்கிட்டு போகட்டும்.. அப்போ உனக்கு மட்டும் நம்பிக்கை இருக்கு.. அடுத்தவன் நம்பிக்கையை குலைக்கிறே? இது எவ்வளவு அயோக்கியத்தனமானது? மறந்துடாதீங்க.

அரசாங்கம்

அரசாங்கம்

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு போனால், கும்பத்தை தூக்கிட்டு ஓடாதீங்க.. அது கடவுள் நம்பிக்கை இருக்கக்கூடிய முடவன் வந்தால், அவனுக்குகூட போய் பண்ணுங்க. ஒரு அதிகாரத்தில் இருக்கிறவங்களுக்கு செய்யாதீங்க.. இன்னைக்கும் இந்து கோயில் மட்டும் அரசாங்கம் கையில் இருக்கு.. இவங்களால சர்ச் மேல கை வைக்க முடியல.. மசூதி மேல கை வைக்க முடியல.. அடுத்த முயற்சியாக கோயில்களை அவரவரே, அந்தந்த மதத்தினரே நடத்த வேண்டும்.. அதையும் கொண்டு வரணும்.. நல்லது நடக்கும்.. நல்லது நடக்கணும்னு நினைக்கிறவங்களை ஆதரிக்கணும்.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

எனக்கும் வயது 70 தான், ரஜினிக்கும் 70தான்.. ரஜினியை விட 14 நாள் சின்னவன், ஆனால் ஒன்று, தமிழ்நாட்டை பொறுத்தவரை, நல்லது நினைக்கிறவங்களுக்கு நம்ம ஆதரவை தருவோம்.. மோடியை திட்டிறாங்களே அவங்களுக்கு நான் சொல்றேன், 2024-லயும் மோடிதான் இந்தியாவின் பிரதமர்.. அதுக்கு அப்புறம்? நீங்க இருக்க மாட்டீங்க அவ்வளவுதான்.. அவர் இருப்பார்!

ஜாதி வெறி?

ஜாதி வெறி?

நான் போகாத நாடு இல்லை.. ஈஸ்ட் ஆர் வெஸ்ட். இண்டியா இஸ் பெஸ்ட்.. இந்தியாவை போன்ற சிறந்த நாடு இல்லை.. அதை சில தறுதலைகள் தப்பா பயன்படுத்திக்க பார்த்தால், அதை நாம் விடக்கூடாது. நமக்கு பிடிக்காத டிவிக்களை புறக்கணிப்போம்.. பத்திரிகைகளை புறக்கணிப்போம்.. நாம சின்ன வயசுல ஸ்கூல்ல எல்லாருடைய டிபன் பாக்ஸ்-களில் கையை விட்டு சாப்பிடலையா? இப்போ எங்க இருந்து வந்தது இந்த ஜாதி வெறி? நமக்கு வெறி இல்லையே? ஏன் மத்தவங்களுக்கு மட்டும் நம்ம மேல வருது?

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

அப்படி வந்தால், வெறிப்பிடித்த நாய்களை கார்ப்பரேஷன்களுக்கு போன் பண்ணி புடிச்சிட்டு போக சொல்லணும்.. கார்ப்பரேஷனுக்கு போன் பண்ணுங்க.. ஒன்னு மறந்துடாதீங்க, எந்த எலெக்‌ஷனா இருந்தாலும் சரி, வார்டு எலக்‌ஷனா இருந்தால் கூட, திமுகவோ, திராவிடர் கழகமோ, கடவுள் எதிர்ப்பாளர்களோ யாரோ, அவங்களுக்கு ஓட்டு போடாதீங்க.. அதுதான்.. இந்த சத்தியத்தை மட்டும் மறந்துடாதீங்க..

திருமாவளவன்

திருமாவளவன்

திருமாவளவனை பத்தி எப்படி இப்போ அசிங்கமா பேசுறாங்க.. அந்த பேர் நமக்கு வந்துடக்கூடாது.. நாம எந்த சங்கத்திலயும் உறுப்பினராகிதான் நான் இந்த சாதியை சார்ந்தவன்னு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.. நமக்கு பர்த் சர்ட்டிபிகேட் இருக்கு.. அப்பா, தாத்தாவுக்கு இருக்கு.. நாம எந்த சங்கத்திலயும் சேர வேண்டியது இல்லை.. எந்த பிராமணனும் சங்கத்துக்கு கட்டுப்பட்டு செய்றவன் இல்லை.. எல்லாருக்கும் சுய அறிவு உண்டு.. நாம எல்லாரும் அறிவாளிகள்.. அதுதான் நம்ம பிரச்சனையே!

ஆர்எஸ் பாரதி

ஆர்எஸ் பாரதி

ஆர்எஸ் பாரதி யாரு? அது என்ன அறிவில்லாத பேச்சு? ஒருத்தன் நம்ம மூக்குல குத்துவான், அப்பறம் வருத்தப்படுவானா? நமக்கு ரத்தம் வரும், அவரு வருத்தம் தெரிவிப்பாரா? குத்தினவன் மூக்குல திருப்பி குத்த வேணாமா? யாரு இவரு? எம்பியா கூட இருந்துட்டு போகட்டுமே? ஒரு கட்சியில நாய்க்கு சீட்டு குடுத்தாகூட அது எம்பி ஆகிட்டு போகுமே.. அதுக்காக என்ன வேணும்னாலும் பேசிடறதா?

பிராமணர்

பிராமணர்

அரசியல் அமைப்பு சட்டப்படி வாழ்பவர்கள்தான் பிராமணர்கள்.. நாம கள்ள நோட்டு அடிக்கல.. எந்த தப்பும் பண்ணல.. 2ஜி-ல யாரும் மாட்டிக்கல.. வீட்டுல இருக்கிற நாய்க்கு மொதல்ல சோறு போட்டுட்டுதான் அப்பறம் ஆர்எஸ் பாரதிக்கு போடறாங்களாம்.. இவர் போய் ஒரு பிராமணரை நாய்-ன்னு சொல்லலாமா?" என்று பேசி உள்ளார்!

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
sve sekhar controversy speech against dmk senior leader rs bharathi in brahmin community protest
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more