சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன மொத்தமா 10 பைசா வருமா?.. ரஜினி குறித்த கி.வீரமணி கண்டனத்துக்கு எஸ்.வி.சேகர் நக்கல்!

ரஜினி பேச்சுக்கு எஸ்வி சேகர் ஆதரவு தந்து ட்வீட் போட்டுள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    பெரியார் பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது.. ரஜினிகாந்த் பரபர பேட்டி

    சென்னை: "ஈவெரா பற்றி பேசியதற்கு ரஜினி உரிய விலையை கொடுப்பார் - கி.வீரமணி. என்ன மொத்தமா 10 பைசா வருமா⁉️ ஆனா, இந்துக்கடவுள்களை பற்றி அவதூறாக பேசிவரும் நீங்கள் கொடுக்கப்போகும் விலை உங்க டிரஸ்டுல இருப்பதை விட மிக அதிகமாக இருக்கப்போகிறது. மணி போனா பாக்கி பூஜ்யம்" என்று எஸ்வி சேகர் காரசாரமாக ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

    "பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.. செருப்பு மாலை போடப்பட்டது.." என்ற ரஜினியின் பேச்சுக்கு கடுமையான எதிர்ப்பு அன்றைய தினமே கிளம்பியது.

    போலீசிலும் திகவினர் புகார் அளிக்கவும் முயன்றனர்.. அப்போது முதல் இப்போது வரை எச்.ராஜா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் முதல் உள்ளூர் பிரமுகர்கள் ரஜினிக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இன்றைய தினம் ரஜினியின் செய்தியாளர்களின் சந்திப்பு குறித்து திக தலைவர் வீரமணி உட்பட பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    மூலப்பத்திரம்

    மூலப்பத்திரம்

    ஆனால் இதற்கும் பாஜக தரப்பில் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.. ரஜினிக்கு ஆதரவு என்ற பெயரில், எச்.ராஜா திமுகவின் முரசொலி மூலப்பத்திரத்தை கேட்டு ட்வீட் போடுகிறார் என்றால், எஸ்வி சேகர், திகவினரை வம்புக்கு இழுத்து ட்வீட் போட்டுள்ளார்.

    கி.வீரமணி

    கி.வீரமணி

    எஸ்வி சேகர் தனது ட்விட்டரில், "ஈவெரா பற்றி அவதூறாக பேசியதற்கு ரஜினிகாந்த் உரிய விலையை கொடுப்பார் - கி.வீரமணி. என்ன மொத்தமா 10 பைசா வருமா⁉️ இந்துக்கடவுள்களையும் சடங்குகளும் பற்றி அவதூறாக பேசிவரும் நீங்கள் கொடுக்கப்போகும் விலை உங்க டிரஸ்டுல இருப்பதை விட மிக அதிகமாக இருக்கப்போகிறது. மணி போனா பாக்கி பூஜ்யம்" என்று பதிவிட்டுள்ளார்.

    10 பைசாக்கு சமம்

    10 பைசாக்கு சமம்

    அதாவது பெரியார் பற்றின பேச்சு 10 பைசாக்கு சமம், ஆனால் இந்துக்கடவுள்களை பற்றி பேசினதுக்கு விலை அதிகம் என்று எஸ்வி சேகர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே கொந்தளித்து போயுள்ள திகவினரின் மத்தியில் எஸ்விசேகரின் இந்த பதிவு மேலும் கிலோ கணக்கில் பெட்ரோலை ஊற்றி உள்ளதைபோல எரிச்சலை கிளப்பி விட்டுள்ளது.

    கமெண்ட்கள்

    கமெண்ட்கள்

    எஸ்வி சேகரின் இந்த பதிவிற்கு கீழே "போலீசுக்கு பயந்து அன்னைக்கு மறைஞ்சிட்ட எஸ்வி சேகருக்கு பேச்சப்பாரு, பெரிய ஹைகோர்ட் மாதிரி" என்பன போன்ற கண்டன பதிவுகளையும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    English summary
    sve sekher supports rajnikanths opinion and slams diravidar party on his twitter
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X