சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எஸ்.வி. சேகர் சார்.. என்ன இதெல்லாம்.. கொரோனாவில் கூட அரசியல் பண்ணலாமா.. வைரைஸை வைத்து விளையாடலாமா?!

சோனியா காந்தியை விமர்சித்து எஸ்வி சேகர் ட்வீட் பதிவிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனாவில் கூட அரசியல் செய்ய முடியுமா.. ஒரு வைரஸ் நோயைகூட அரசியலாக பார்க்க முடியுமா? முடியும் என்று நிரூபித்துள்ளார் பாஜக ஆதரவாளர் எஸ்.வி.சேகர்!

பொதுவாக, எச்.ராஜா ட்வீட் போட்டாலும் சரி, எஸ்வி. சேகர் ட்வீட் போட்டாலும் சரி.. பெரும்பாலான ட்வீட்கள் அப்படியே பற்றி கொண்டு எரிவது போல பரபரப்பாகி விடுகிறது... இவர்கள் இருவரும் பேசினாலும் அதே பரபரப்பு சூடு குறையாமல் தகிக்கிறது!

இப்போது எஸ்வி சேகர் ஒரு ட்விட் போட்டுள்ளார்.. அது கொரோனா வைரஸ் பற்றியது.. சில தினங்களாக அமுங்கி கிடந்த இந்த கொரோனா திடீரென இந்தியாவிற்குள் பீதியை கிளப்பி உள்ளது.. அதனால் மீண்டும் கிலி உணர்வு படர்ந்து வருகிறது.

Recommended Video

    Corona virus : Affected toll nears 1 lakhs all over the world

    கொரோனா எப்படி பரவியது? எத்தனை நாடுகள் பாதித்துள்ளது.. பின்னணி என்ன? ஹு வெளியிட்ட அறிக்கை!கொரோனா எப்படி பரவியது? எத்தனை நாடுகள் பாதித்துள்ளது.. பின்னணி என்ன? ஹு வெளியிட்ட அறிக்கை!

    மத்திய அரசு

    மத்திய அரசு

    இந்த கொரோனா வைரஸை தடுக்க மத்திய அரசு பல வகைகளிலும் முன்னெச்சரிக்கை உள்ளிட்ட தீவிர நடவடிக்கையில் இறங்கி வருகிறது.. அதில் ஒன்றுதான் ஈரான், இத்தாலி, தென் கொரியா, ஜப்பான் நாடுகளிலிருந்து இந்தியா வருவதற்கு வழங்கப்பட்ட வீசா ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு நடவடிக்கை.. கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியை அடுத்து, இந்த உத்தரவை மத்திய அரசு பிறபித்துள்ளது.

    தற்காலிக ரத்து

    தற்காலிக ரத்து

    ஆனால், இந்த வைரஸ் விஷயத்தில் யாருமே எதிர்பாராமல் உள்ளே நுழைந்து அதை அரசியல் ரீதியாக மறைமுகமாக திரித்து ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார் எஸ்வி சேகர்.. அதில், "கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இத்தாலி உள்ளிட்ட 4 நாடுகளின் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விசாவை இந்தியா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. - செய்தி ... இதை 40 வருஷம் முன்னாடி செஞ்சிருந்தா நம்ம நாடு இன்னும் சிறப்பா இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

    எஸ்வி சேகர்

    மொத்தம் 4 நாடுகளை மத்திய அரசு சொல்லி இருந்தாலும், எஸ்வி சேகர் குறிப்பிட்டுள்ளது ஒரே ஒரு இத்தாலியை மட்டும்தான்.. என்ன காரணம்? எதற்காக சம்பந்தமே இல்லாமல் சோனியா காந்தியை குறிப்பிட வேண்டும்? ஒருவேளை 40 வருஷத்துக்கு முன்பே கொரோனா இந்தியாவை தாக்கியிருந்தால் எஸ்வி சேகர் என்ன பதிலடி தந்திருப்பார்? என்பன நமக்கு தெரியவில்லை.ஆனால், அவரது ட்வீட்டுக்கு கீழே பலரும் கொந்தளித்து கமெண்ட்களை போட்டுள்ளனர்.

    தயிர் சோறு

    தயிர் சோறு

    அதில், "இப்போ விற்பதற்கு பதில் 40 வருடத்திற்கு முன்பே நாட்டை விற்றுவிட்டு பார்ப்பனர்கள் எல்லாம் அமெரிக்கா கிளம்பி இருப்பீர்கள்?" என்றும் "இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு விசா இல்லாத காலத்தில் கைபர் போலன் கணவாய் வழியாக வந்தவர்களை என்ன செய்வது.அவர்கள் வரா விட்டால் இந்த நாட்டில் ஏற்றத்தாழ்வுகளே வந்திருக்காது ஜாதி வடிவில்" என்றும் "2000வருஷத்துக்கு முன்னாடியே செஞ்சிருந்தா.. தக்காளி சோறு, தயிர் சோறு, லெமன் சோறு, என்றே இருந்திருக்கும் தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், என்றும் மாறி இருக்காது..." என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

    கொடிய நோய்கள்

    கொடிய நோய்கள்

    ஒருவர் சம்பந்தமே இல்லாமல், "இந்த ஆறு வருட சிறப்பு என்னனு சொன்னால் நல்லாருக்கும்ல சேகரு?...எங்க ஒன்னு சொல்லு." என்று உரிமையாக எஸ்வி சேகரை கேள்வியும் எழுப்பி உள்ளார். நோய் பொதுவானது.. இயற்கையானது.. அதுவும் இந்த கொரோனா காற்றில் பரவக்கூடியது.. அதற்கு குறிப்பிட்ட நபரை போல சாதி, மதம், இனம் எதுவும் தெரியாது.. மொத்தமாக வாரி சுருட்டி கொண்டு பரலோகம் போய்விடும் என்பதுதான் அந்த வைரஸின் கொடூரமே!

    English summary
    Sve shekher tweet about corona virus and he has criticized congress senior leader soniya gandhi indirectly
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X