சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கைலாசாவின் பொற்காசுகள்... காலணா முதல் 10 காசு வரை 5 வகை தங்க நாணயங்கள் வெளியிட்ட நித்யானந்தா

விநாயகர் சதுர்த்தியான இன்று கைலாசா நாட்டின் தங்க நாணயங்களை அறிமுகம் செய்துள்ளார் நித்யானந்தா.

Google Oneindia Tamil News

சென்னை: எனக்கென்று ஒரு நாடு என் மக்கள் என்று கூறி கைலாசா நாட்டை வாங்கி அதில் தனி ஆவர்த்தனம் செய்து வரும் நித்யானந்தா இப்போது தங்க நாணயங்களையும் வெளியிட்டுள்ளார் நித்யானந்தா. விரைவில் பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பும் வெளியிட உள்ளதாக கூறியுள்ளார்.

Recommended Video

    Nithyananda's Kailasa Currency நம்ப முடியவில்லை | Oneindia Tamil

    இந்தியாவில் இருந்த வரைக்கும் நித்யானந்தா தினம் தினம் செய்தியில் அடிபட்டுக்கொண்டே இருந்தார். பலாத்கார வழக்கில் அகமதாபாத் காவல்துறையினரால் குற்றவாளியாக தேடப்பட்டு வரும் நித்தியானந்தா, ஒரு புதிய இறையாண்மை தேசத்தை உருவாக்குவதாகவும், அதற்கு கைலாசா என்று பெயரிடுவதாகவும் தெரிவித்தார்.

    யுட்யூப் சேனலில் தினம் தினம் வீடியோ போட்டு எல்லோரையும் அலற வைத்தார். திடீரென கடந்த வாரம் கைலாசாவுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அதிரடி அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்ட அவர் விநாயகர் சதுர்த்தியன்று அதனை 2 முறையாக அறிமுகம் செய்வதாக கூறியிருந்தார் நித்யானந்தா.

     "கசமுசா" நித்தியானந்தாவின்.. அதிரடி "கைலாசா".. ஆனால் மேட்டரே வேறயா இருக்கே.. அம்பலமாகும் ரகசியங்கள்!

    கைலாசா தங்க காசுகள்

    கைலாசா தங்க காசுகள்

    நித்யானந்தா சொன்னது போலவே இன்றைய தினம் நாணயமாக கைலாசா நாட்டிற்கான புதிய தங்க காசுகளை அறிமுகம் செய்துள்ளார். அந்த காசுகள் அடங்கிய போட்டோ போட்டு போஸ் கொடுத்துள்ளார் நித்யானந்தா.

    காலணா முதல் 10 காசு வரை

    காலணா முதல் 10 காசு வரை

    பழைய கால இந்திய நாணயங்களைப் போல காலணா, எட்டணா என தொடங்கி 10 பைசா வரை 5 வகையான நாணயங்களை அறிமுகம் செய்து உள்ளார் நித்யானந்தா.

    இந்து நாடுகளுடன் வர்த்தகம்

    இந்து நாடுகளுடன் வர்த்தகம்

    மன்னர்கள் காலத்தில்தான் பொற்காசு புழக்கத்தில் இருந்தது. இப்போது அதே போல பொற்காசுகளை புழக்கத்தில் விட்டுள்ளார் நித்யானந்தா. இந்த காசுகளை கொண்டு உலகின் 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    கைலாசா நாணயம்

    கைலாசா நாணயம்

    ஒரு கைலாசியன் டாலர் சுமார் 11.66 கிராம் தங்கத்தால் ஆனது. 11.66380 கிராம் தங்கம் ஒரு தொலா என்று அழைக்கப்படுகிறது. எஸ்.ஐ. அலகுமுறையின்படி எப்படி மி.கிராம், கிராம், கிலோ கிராம் ஆகிய அளவைகள் உள்ளதோ அதேபோல இந்து முறைமைப்படியான அளவை முறைகளில் தொலா என்பது இருந்தது. கைலாசியன் டாலர் ஒரு தொலா நாணயமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    தங்க நாணயங்களின் வடிவங்கள்

    தங்க நாணயங்களின் வடிவங்கள்

    அரை டாலர், கால் டாலர் ஆகிய நாணயங்களும் தங்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நாணயங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இல்லை. இந்தியாவின் மன்னராட்சிக் காலங்களில் பயன்படுத்தப்பட்ட பழங்கால நாணயங்களின் வடிவில் தங்க நாணயங்களாக வெளியிடப்பட்டுள்ளன.

    மீட்டெடுத்த நித்தி

    மீட்டெடுத்த நித்தி

    நம் நாட்டில் முன்பு புழக்கத்தில் இருந்த நாணயங்களை புதுப்பித்து மீட்டெடுப்பு செய்துள்ளதாக விளக்கம் கொடுத்துள்ளார் நித்யானந்தா. இதே போல 2டாலர், 3 டாலர், 4 டாலர் 5 டாலர், 10 டாலர் ஆகிய நாணயங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

    கைலாசா பாஸ்போர்ட்

    கைலாசா பாஸ்போர்ட்

    உள்நாட்டுக்கு என ஒரு கரன்சியையும் வெளிநாட்டுக்கு என ஒரு கரன்சியையும் ரெடி செய்துள்ள நித்யானந்தா 300 பக்கம் கொண்ட பொருளாதார கொள்கைகளையும் வகுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார் நித்யானந்தா. விரைவில் கைலாசா நாட்டிற்கான பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பும் வெளியாக உள்ளதாக கூறியுள்ளார்.

    எங்கே இருக்கு கைலாசா

    எங்கே இருக்கு கைலாசா

    தனது நாட்டிற்கு என்று புதிய கல்விக்கொள்கை, பணக்கொள்கை, ரிசர்வ் வங்கி என அனைத்து அறிவுப்புகளையும் வெளியிட்ட நித்யானந்தா தன் நாடு கைலாசா எங்கிருக்கிறது என்று மட்டும் அறிவிக்கவில்லை என்பதுதான் வேடிக்கை.

    English summary
    Kailasa country's gold currency today released by god man Swamy Nithyananda.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X