சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுகவை விடுங்க.. சசிகலாவைப் பிடிங்க.. சாமி அதிரடி!

Google Oneindia Tamil News

- கோயா

சென்னை: தமிழக பாஜகவுக்கு சரியான சாய்ஸ் சசிகலாவாக மட்டுமே இருக்க முடியும். அதிமுகவுடன் கூட்டணி சேருவது வேலைக்கு ஆகாது என்று சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார்.

சாமி ரொம்ப காலமாகவே சசிகலா ஆதரவு நிலைப்பாட்டில்தான் இருக்கிறார். ஆனால் பாஜக அவரைக் கண்டு கொள்வதில்லை. இந்த நிலையில் தற்போது லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் பேச்சைத் தொடங்கியுள்ளது பாஜக.

ஆனால் இது வேஸ்ட் என்று பொட்டில் அடித்தது போல கூறியுள்ளார் சாமி. பாஜகவுக்கு சசிகலா மட்டுமே சரியான சாய்ஸ் என்பது அவரது எண்ணம். ஆனால் அதை பாஜக பொருட்படுத்துமா என்பது கேள்விக்குறி.

தனியா நிற்கலாம்

தனியா நிற்கலாம்

தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என்றும், இல்லை கூட்டணி அமைக்க வேண்டும் என கருதினால் சசிகலாவோடு கூட்டணி வைக்க வேண்டும் என்பது சாமியின் கருத்தாகும்.

வேஸ்ட்

வேஸ்ட்

டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கும் போது இதனைக் கூறியுள்ளார். அவர் கூறுகையில், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். உடன் கூட்டணி சேர்வது பாஜகவுக்கு வீண் வேலை என்று கூறியுள்ள அவர், அதிமுகவுடன் பாஜக கூட்டணி பேச்சு நடத்துவதை விரும்பவில்லை.

கருத்து குண்டு வீச்சு

கருத்து குண்டு வீச்சு

கூட்டணிக்காக இரண்டு கட்சிகளுக்கும் இடையே தீவிரமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் சுப்பிரமணியன் சாமி இந்தப் புதிய குண்டை வீசியுள்ளார்.

வருத்தம்

வருத்தம்

தமிழகத்தை சேர்ந்த தன்னை பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளராக நியமிக்காமல், பியூஸ் கோயலை தலைமை நியமித்ததால் சாமிக்கு சற்று வருத்தம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அதனால்தானால் இப்படிப் பேசுகிறார் என்று சொல்கிறார்கள்.

English summary
Subramaniam Swamy has asked BJP leadership to go with AMMK and it is waste of time to talk with ADMK, he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X