சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"கிளம்பி போறோம்".. அவங்களுக்கு பதிலடி தந்தே ஆகணும்.. ஆஹா.. திமுகவுக்கே சர்ப்ரைஸ் தந்த ஜக்கையன்..!

திமுக கூட்டணிக்கு ஆதித்தமிழர் கட்சி ஆதரவு தருவதாக ஜக்கையன் அறிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: வரப்போகும் இடைத்தேர்தலுக்கு படு மும்முரமாகி விட்டது திமுக கூட்டணி.. புது புது வியூகங்களுடன் தொகுதியில் பிரச்சாரத்துக்கான பிளான்களையும் முன்னெடுத்து வருகிறது. இதைதவிர சில முக்கிய அமைப்புகளும், கட்சிகளும் தொடர் ஆதரவையும் திமுக கூட்டணிக்கு தந்து வருகின்றன.

ஈரோடு கிழக்கு தொகுதியே பரபரத்து காணப்படுகிறது.. எடப்பாடி பழனிசாமி களமிறங்க போகிறார்.. ஓபிஎஸ்ஸும் வேட்பாளரை அறிவித்துள்ளார்.. தேமுதிக, நாம் தமிழர் கட்சி, டிடிவி அமமுகவும் போட்டியிடுகின்றன...

பாமக, இந்த தேர்தலை சந்திக்கப்போவதில்லை என்றும் அதிமுக உள்பட யாருக்கும் ஆதரவு இல்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது.. பாஜக தரப்போ அதிமுகவுக்கு ஆதரவு அளித்திருக்கிறது. ஆனால், 2 அணிகளும் இடைதேர்தலை சந்திக்க உள்ளதால், யாருக்கு யார் ஆதரவு என்று பெரும் குழப்பம் தொடர்கிறது.

ஆதரவாளர்களை அணி திரட்டும் டாக்டர் சரவணன்! மதுரையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைப்பு விழா! ஆதரவாளர்களை அணி திரட்டும் டாக்டர் சரவணன்! மதுரையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைப்பு விழா!

+ பாயிண்ட்ஸ்

+ பாயிண்ட்ஸ்

இதில் முதல் நபராக களமிறங்கி, பிரச்சாரத்தை தீவிரமாக்கி உள்ளது திமுக கூட்டணிதான்.. திமுக காங்கிரஸ் மத சார்பற்ற கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகே.எஸ் இளங்கோவன் போட்டியிட உள்ளதால், அவருக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள் மொத்த பேரும் களமிறங்கி உள்ளனர்.. குறிப்பாக, கே.என்.நேரு, முத்துசாமி, ஏவ வேலு, தாமோ அன்பரசன், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சக்கரபாணி, சாமிநாதன், செந்தில்பாலாஜி, ஆவடி நாசர், கயல்விழி செல்வராஜ் ஆகிய 11 அமைச்சர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் 31 பேர்களை தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற செய்து திமுக மேலிடம் பணியாற்றி வருகிறது.

லிஸ்ட்

லிஸ்ட்

ஈரோடு தொகுதியில் உள்ள 238 வாக்குச்சாவடிகளில் ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களுக்கான வார்டுகளை பிரித்து தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களுக்கென்று தேர்தல் அலுவலகமும் திறந்துள்ளனர்... அமைச்சர்களிடம் சமுதாயம் சார்ந்த ஓட்டுகள் எவ்வளவு உள்ளது என்ற லிஸ்ட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த லிஸ்ட்டுக்கேற்ப கட்சி நிர்வாகிகளை அனுப்பி ஓட்டு கேட்க ஏற்பாடுகள் செய்யப்பட்டும் வருகிறது.. மற்றொருபுறம், திமுக கூட்டணிக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தந்துவருகின்றன..

10,000 மநீம

10,000 மநீம

முக்கியமாக, காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக மநீம கமல்ஹாசன் அறிவித்திருந்தார். கடந்த முறை தேர்தலின்போது, மநீம 10 ஆயிரம் ஓட்டுக்களை பெற்று, இங்கு 4வது இடத்தை தக்க வைத்திருந்தது.. இந்த முறை இளங்கோவனுக்கு ஆதரவு தந்துள்ளது, திமுக கூட்டணிக்கு பலத்தை பெற்று தந்துள்ளது. அதேபோல, இந்த இடைத்தேர்தலில், எஸ்டிபிஐ கட்சியினர் தனியாக போட்டியிட போவதாக அறிவித்திருந்தினர்.

முபாரக்

முபாரக்

ஆனால், அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்கை, ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்தித்து, தனக்கு ஆதரவு வழங்கும்படி கேட்டு கொண்டார். இதை ஏற்று, அவர்கள் போட்டியிடுவதை தவிர்த்து, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தனர். இந்நிலையில், ஆதித்தமிழர் கட்சியும் திமுக கூட்டணிக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளது.. மதுரையில் நிர்வாகிகளிடம் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு, அக்கட்சியின் தலைவர் ஜக்கையன் செய்தியாளர்களை சந்தித்தார்.

வர்றோம் இருங்க

வர்றோம் இருங்க

இதுகுறித்து சொல்லும்போது,"ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் என்பது தமிழக முதல்வருக்கு, தமிழக அரசிற்கு நற்சான்று அளிக்கும் தீர்ப்பாக அமைய வேண்டும். தமிழகத்தில் மதம், ஜாதிக்கலவரத்தை எப்படியாவது உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் பாசிச சக்திகள், இந்துத்துவ சக்திகள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியே மீண்டும் வெல்ல வேண்டும்... இதனால், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதித்தமிழர் கட்சி முழு ஆதரவு அளிக்கிறது. கூட்டணி வெற்றிக்கு பிரச்சாரத்திலும் ஈடுபட உள்ளோம்" என்றார். ஆதரவு தந்ததுடன், பிரச்சாரத்திலும் ஈடுபடபோவதாக ஆதித்தமிழர் கட்சி தெரிவித்துள்ளது, திமுக கூட்டணிக்கு உற்சாகத்தை தந்து வருகிறது.

English summary
Sweet news by aadhi tamil party and support for the dmk alliance in the By election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X