சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்வீட் வாங்குவதில் முறைகேடு நடக்கவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில்

Google Oneindia Tamil News

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வாங்குவதில் எந்த முறைகேடு நடைபெறவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பதிலளித்துள்ளார்.

Recommended Video

    ஸ்வீட் வாங்குவதில் முறைகேடு நடக்கவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில்

    பல்லாவரம் நகராட்சி பகுதிகளில் கடந்த திமுக ஆட்சியின்போது இயக்கப்பட்ட பேருந்துகள் அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் பொதுமக்கள் நலன் கருதி நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் 17 பழைய மற்றும் புதிய வழித்தடங்களில் பேருந்து இயக்கத்தை குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.

    நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் - அன்பில் மகேஷ் திட்டவட்டம் நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் - அன்பில் மகேஷ் திட்டவட்டம்

    பொது நிகழ்ச்சி

    பொது நிகழ்ச்சி

    இந்த நிகழ்ச்சியில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்,பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது:

    ஆவினில் குறைந்த விலை

    ஆவினில் குறைந்த விலை

    போக்குவரத்து ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்குவதில் எந்த ஒரு தவறும் நடைபெறவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் 262 ரூபாய்க்கு இனிப்புகள் வாங்கப்பட்டது. ஆனால் இந்த முறை 230 ரூபாய்க்கு அரசு நிறுவனமான ஆவினில் இனிப்புகள் கொள்முதல் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே இதில் எந்த முறைகேடும் இல்லை. இதில் பாஜக தலைவர் அண்ணாமலை தவறான குற்றச்சாட்டை முன் வைக்கிறார்.

    சிறப்பு பஸ்கள்

    சிறப்பு பஸ்கள்

    தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து ஆறு இடங்களில் 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
    மீண்டும் தீபாவளி முடிந்து சென்னை திரும்ப 17 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் அதிகரிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

     அண்ணாமலை குற்றச்சாட்டு

    அண்ணாமலை குற்றச்சாட்டு

    ஒவ்வொரு பண்டிகைக்கும் போக்குவரத்துக் கழகம் சார்பில் இனிப்புகள் வழங்குவது வழக்கம். இதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இம்முறை இனிப்பு கொள்முதல் தொடர்பாக தனித்தனியே டெண்டர் கோரப்பட்டது. ஆனால், இனிப்பு ஆர்டர் எடுக்கும் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு 100 கோடி அளவுக்கு வர்த்தகம் இருக்க வேண்டும் என இந்த முறை விதி உருவாக்கப்பட்டதாகவும், அது குறிப்பிட்ட ஒரு பெரிய தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக இருப்பதாகவும் பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில்தான், அந்த உத்தரவை ரத்து செய்து, அரசு நிறுவனமான ஆவினில் இனிப்பு வாங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Transport Minister Rajakannapan has responded to BJP leader Annamalai's allegation that there was no malpractice in buying sweets for transport workers. Minister says, they are purchasing Aavin sweets.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X