சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிஜமாகவே பாராட்ட வேண்டிய மாற்றம்.. ஸ்விகி பெண்களுக்கு அளித்த சூப்பர் சலுகை!

Google Oneindia Tamil News

சென்னை: ஆன்லைன் உணவு விநியோக தளமான ஸ்விகி, தனது நிறுவனத்தில் உணவு டெலிவரி வேலை செய்யும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின் போது மாதம் இரண்டு நாள் விடுப்புடன் கூடிய ஊதியம் அளிப்பதாக அறிவித்துள்ளது. பெண்களின் வலிகள், உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களை தங்கள் வேலையில் ஊக்குவிப்பதற்காக ஸ்விகி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

ஸ்விகி நிறுவனம் இந்திய அளவில் ஆன்லைன் மூலம் உணவு விநியோக சேவை செய்யும் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றாகும். பெரும் நகரங்கள் தொடங்கி, சிறுநகரங்களிலும் தனது கிளையை விரிவுபடுத்தி உள்ளது. ஒற்றை ஆப்பை டவுன்லோடு செய்துவிட்டு இந்தியாவில் எங்கிருந்தாலும் (நகரங்கள், பெரிய நகரங்கள்) வேண்டிய கடைகளில் உணவுகளை ஆர்டர் செய்து வீட்டில் அல்லது நீங்கள் சொல்லும் இடத்திற்கு வரவழைத்து உணவை பெற்றுக்கொள்ள முடியும்.

5 மாநில தேர்தல்கள்...வியூகம் வகுக்க அக் 26-ல் காங். பொதுச்செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் கூட்டம்! 5 மாநில தேர்தல்கள்...வியூகம் வகுக்க அக் 26-ல் காங். பொதுச்செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் கூட்டம்!

உணவை விநியோகம் செய்யும் வேலையில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் இந்தியா முழுவதும் வேலை செய்கிறார்கள். இந்நிலையில் கையில் ஒரு ஸ்கூட்டர் இருந்தால் போதும், மாதம் 10 ஆயிரத்திற்கு மேல் சம்பாதிக்க முடியும் என்பதால் ஏரளாமான பெண்கள் ஸ்விகி உள்ளிட்ட உணவு விநியோக நிறுவனங்களில் வேலை செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.

பெண்கள்

பெண்கள்

இந்நிலையில் ஸ்விகியின் உணவு விநியோகம் செய்யும் பிரிவில் ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. ஸ்விக்கி தனது முதல் பெண் உணவு சப்பளையரை சேர்த்தது. அதன் பின்னர், அதன் பணியாளர்களில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்புகிறது. இதனை கருத்தில் கொண்டு, பெண்களை பணியில் சேர ஊக்கப்படுத்தும் வகையில் ஸ்விகி பல்வேறு வசதிகளையும், திட்ட கொள்கைகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது.

இரண்டு நாள் சம்பளம்

இரண்டு நாள் சம்பளம்

அந்தவகையில், பெண் ஊழியர்கள் அசௌகரியமாக உணரும் தங்களின் மாதவிடாய் காலத்தில் இரண்டு நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று ஸ்விகி அறிவித்துள்ளது. இதுகுறித்து, ஸ்விகி நிறுவனத்தின் செயல்பாட்டு துணைத் தலைவர் மிஹிர் ஷா கூறுகையில், "பெண்கள் தங்களின் மாதவிடாய் காலத்தின்போது வெளியில் செல்லவே அசௌகரியமாக உணருகின்றனர். பெண்கள் உணவு விநியோகம் செய்ய தயங்குவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது.

24 நாட்கள் சம்பளம்

24 நாட்கள் சம்பளம்

அதனால், அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், பெண் ஊழியர்கள் தங்களின் மாதவிடாய் காலத்தில் இரண்டு நாட்களுக்கு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். அதற்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படாது. இந்த திட்ட அறிவிப்பின் மூலம், பெண் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 24 நாட்களுக்கு விடுப்பு கிடைக்கும்" என்றார். மாதாந்திர ஊதிய நேரத்தைத் தேர்ந்தெடுப்பவர்கள் குறைந்தபட்ச வருவாய் உத்தரவாதத்தைப் பெறுவார்கள் என்றும் கூறினார்கள்.

ஸ்விகி பட்டியல்

ஸ்விகி பட்டியல்

ஸ்விகி நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களில் 99 சதவீதம் பேர் 45வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். 89 சதவீதம் பேர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் வைத்துள்ளனர். 40 சதவீதத்திற்கு மேல் வீட்டு செலவை சமாளிக்கவே வேலைக்கு வருகிறார்கள். 24 சதவீதம் பேர் முதல் முதலாக வருவாய் ஈட்டுவது ஸ்விகியில் தான் 42 சதவீதம் பேர் குழந்தைகள் கல்வி மற்றும் அவர்களின் செலவுக்காக வேலைக்கு வருகிறார்கள். 32 சதவீதம் பேர் கல்விக்காக வேலைக்கு வருகிறார்கள். இப்படியான ஒரு பட்டியலை ஸ்விகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

English summary
Swiggy, an online food delivery site, has announced that it will be offering two days off a month during the menstrual period to women who work in food delivery at its company.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X