சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தென் மாவட்டங்களில் அதிகரித்து வரும் கொலைகள்.. நேரடியாக களத்தில் குதித்த டிஜிபி சைலேந்திர பாபு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கூலிப்படை ஆதிக்கத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Tamilnadu முழுவதும் இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட ரவுடிகள்.. Sylendra Babu அதிரடி நடவடிக்கை

    தென் மாவட்டங்களில் கொலைகள், பழிக்கு பழி வாங்கும் கொலைகள், முன் விரோத கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதற்கு சாட்சியாக எத்தனையோ சம்பவங்களை உதாரணமாக சொல்ல முடிந்தாலும் கடந்த 22 ஆம் தேதி ஒரே நாளில் நடந்த இரு வேறு கொலைகள்தான் மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியது.

    தமிழகத்தில் இன்று 3-வது கட்ட மெகா முகாம் தொடங்கியது- 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு!தமிழகத்தில் இன்று 3-வது கட்ட மெகா முகாம் தொடங்கியது- 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு!

    திண்டுக்கல் நகரில் கடந்த 13ஆம் தேதி இருவரை துரத்திச் சென்ற கும்பல் பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் முன்னாள் கவுன்சிலரின் கணவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    முன்பகை

    முன்பகை

    அது போல் கடந்த 22 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் முன்பகை காரணமாக நிர்மலா தேவி என்பவரின் தலையை வெட்டி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கொண்டு போய் வீசினர். 2012 ஆம் ஆண்டு திண்டுக்கலை சேர்ந்த பசுபதி பாண்டியனை தூத்துக்குடியை சேர்ந்த சில வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவத்திற்கு தூத்துக்குடி கும்பலுக்கு தகவல் கொடுத்த நிர்மலா தேவியை பழிக்கு பழியாக கொன்று அவரது தலையை பசுபதி பாண்டியன் வீடு முன்பு கொண்டு போய் வைத்தது.

    அச்சம்

    அச்சம்

    இதையடுத்து அன்றைய தினமே திண்டுக்கல் அருகே அனுமந்தராயன் கோட்டை பகுதியில் கூலித் தொழிலாளி ஸ்டீபன்ராஜ் மர்மநபர்களால் வெட்டி கொல்லப்பட்டார். ஒரே நாளில் நடந்த இரு கொலைகளால் திண்டுக்கல் நகரில் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. இதையடுத்து தமிழக்தில் கடந்த இரு தினங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையால் 2,512 ரவுடிகளை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 5 துப்பாக்கிகள், 934 அரிவாள்களை பறிமுதல் செய்து அவர்களிடம் நன்னடத்தை பிணை பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளனர்.

    சைலேந்திர பாபு

    சைலேந்திர பாபு

    இந்த நிலையில் தென் மாவட்டங்களில் நடந்து வரும் தொடர் கொலை சம்பவங்களைத் தடுக்கும் வகையில் தென் மாவட்ட காவல் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் நெல்லை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு சைலேந்திர பாபு செய்தியாளர்களை சந்தித்தார்.

    2513 ரவுடிகள்

    2513 ரவுடிகள்

    அப்போது அவர் கூறுகையில் கடந்த 48 மணி நேரத்தில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 2513 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் என்பது இல்லை. பழிக்குப் பழியாக குற்றங்கள் நடைபெறாமல் இருக்க கூலிப்படையினர் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார்.

    English summary
    Tamilnadu DGP Sylendra Babu says that mercenaries domination will be come to end soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X