சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓமிக்ரான் வைரஸ் அறிகுறிகள் என்னென்ன? தென்னாப்பிரிக்கா மருத்துவர்கள் அட்வைஸ்

ஓமிக்ரான் வைரஸ் விரைவாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தன்மை உடையது. இந்த வைரஸ் தாக்கியவர்களுக்கு என்னென்ன அறிகுறிகள் தென்படும் என்று பார்க்கலாம்.

Google Oneindia Tamil News

சென்னை: புதிதாகப் பரவி வரும் வீரியமிக்க வைரஸ் ஓமிக்ரான் , ஏற்கெனவே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களை குறிவைத்து தாக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓமிக்ரான் வைரஸ் தாக்கியவர்களுக்கு சோர்வு, லேசான தசை வலி, தொண்டை அரிப்பு, வறட்டு இருமல் மற்றும் லேசான காய்ச்சல் அறிகுறிகள் தென்படும் என தென்னாப்பிரிக்க மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Recommended Video

    Omicron Symptoms என்ன? | உருமாறிய புதிய Corona Variant | Oneindia Tamil

    தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ள பி.1.1.529 என்ற வகை கொரோனா தற்போது குறைந்தது 17 நாடுகளில் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. இது மிகவும் கவலையளிக்கும் கொரோனா வைரஸ் (Variant of Concern) என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது.

    Symptoms of Omicron Virus - What are the safety measures

    ஓமிக்ரான் வைரஸ் விரைவாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தன்மை உடையது என்றும் தடுப்பூசிகள் இந்த வைரஸுக்கு எதிராக குறைந்த அளவே செயலாற்றுவதாகவும் கூறப்படுகிறது. இந்த வைரஸின் காரணமாக உலக நாடுகள் பலவும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளன. கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட 12 நாடுகளில் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அதனையடுத்து, இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவி விடாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றன.

    தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஏஞ்சலிக் கோட்ஸி, ஒமிக்ரான் வைரஸ் புதிய அறிகுறிகளை உருவாக்குவதாக தெரிவித்துள்ளார். ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பின் சில அறிகுறிகளில் சோர்வு, லேசான தசை வலி, தொண்டை அரிப்பு, வறட்டு இருமல் மற்றும் லேசான காய்ச்சல் ஏற்படும் என்று கூறியுள்ளார்.
    இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஒரு சில நாட்களுக்குள் குணமடைந்து விடுவர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியதில்லை. கடுமையான நோய் வராது என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் இப்போதைக்கு, தடுப்பூசி போடாத நோயாளிகளுக்கு கூட லேசான அறிகுறிகள் தென்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்தநிலையில், ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு குறித்து மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியா, 'இந்தியாவில் இதுவரை ஓமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. ஓமிக்ரான் வைரசை எதிர்த்துப் போராட அனைத்து நிலைகளிலும் தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஓமிக்ரான் வைரஸ் இந்தியாவிற்குள் ஊடுருவாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    தேவையான பிரேக் வந்துவிட்டது.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்.. 3 முக்கியமான அப்டேட்கள்! தேவையான பிரேக் வந்துவிட்டது.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்.. 3 முக்கியமான அப்டேட்கள்!

    ஓமிக்ரான் வைரஸ் பரவியுள்ள 12 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா 3வது தவணை தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்துவது தொடர்பாகவும் மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

    English summary
    It has been reported that the newly spread malignant virus Omicran is already targeting survivors of corona infection. Fatigue, mild muscle pain, itchy throat, dry cough and mild fever have been reported in people with the Omigron virus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X