சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காங்கிரஸ் அறிக்கையை ஸ்டாலின் மீது வைத்த குற்றச்சாட்டாகவே பார்க்கிறோம்.. டிஆர் பாலு பரபர!

Google Oneindia Tamil News

சென்னை: காங்கிரஸ் அறிக்கையை திமுக தலைவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டாகவே பார்க்கிறோம் என திமுக எம்பி டிஆர் பாலு தெரிவித்துள்ளார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவியிடங்களில் காங்கிரஸுக்கு திமுக இடங்களை ஒதுக்கவில்லை என்பதால் அக்கட்சி கூட்டணி தர்மத்தை மீறிவிட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டார்.

T.R.Baalu explains why DMK boycotts Congress partys meeting

இதனால் திமுக- காங்கிரஸ் இடையே சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கலந்து கொண்ட கூட்டம் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை. அது போல் திமுகவும் இந்த கூட்டத்தில் பங்கேற்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மொத்தமாக சொதப்பிய பிளான்.. கே.எஸ் அழகிரி போட்ட யார்க்கரில் சிக்ஸர் அடித்த ஸ்டாலின்.. காங். ஷாக்!மொத்தமாக சொதப்பிய பிளான்.. கே.எஸ் அழகிரி போட்ட யார்க்கரில் சிக்ஸர் அடித்த ஸ்டாலின்.. காங். ஷாக்!

இதுகுறித்து திமுக எம்பியும் அக்கட்சியின் மூத்த தலைவருமான டி ஆர் பாலு கூறுகையில் திமுக கூட்டணி தர்மத்தை மீறிவிட்டதாக கே.எஸ்.அழகிரி கூறியதால் திமுக நிர்வாகிகளுக்கு வருத்தம். காங்கிரஸ் அறிக்கையை திமுக தலைவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டாகவே பார்க்கிறோம் .

அதனால் தான் டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணி பழைய நிலைக்கு திரும்பியிருக்கிறதா என்பதற்கு காலம் பதில் சொல்லும் என கூறினார்.

English summary
DMK MP T.R. Baalu says that we are taking the Congress statement as allegations against our DMK President MK Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X