சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னங்க சார் உங்க சட்டம்... போலீஸ் டிஜிபி அலுவலகத்தில் கடுகடுத்த டி.ஆர்.பாலு எம்.பி..!

Google Oneindia Tamil News

சென்னை: திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது என்றும் போலீஸ் பாரபட்சமாக செயல்படுகிறது எனவும் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு குற்றஞ்சாட்டியுள்ளார்.

போலீஸார் செயல்பாடு குறித்து டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்த அவர், கைது, சித்ரவதை என பல கொடுமைகளை சந்தித்தவர்கள் தான் திமுகவினர் எனக் கூறினார். மிசா கால நிகழ்வுகளை சுட்டிக்காட்டிய டி.ஆர்.பாலு, போலீஸ் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் தெரிவித்தார்.

T.R.Balu lodged a complaint at the police DGP office

அதிமுகவினரும் பாஜகவினரும் கூட்டங்கள் நடத்தும் போதெல்லாம் பரவாத கொரோனா, திமுக கூட்டம் நடத்தினால் மட்டும் பரவிவிடுமா என கேள்வி எழுப்பினார். மேலும், காவல்துறை செயல்பாடு குறித்து பல முறை புகார் அளித்தும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது வேதனை தருவதாக பாலு கூறியுள்ளார்.

7 பேர் விடுதலை விவகாரம்... ஆளுநர் இனியும் சாக்கு போக்கு சொல்லக்கூடாது... திருமாவளவன் வலியுறுத்தல்..!7 பேர் விடுதலை விவகாரம்... ஆளுநர் இனியும் சாக்கு போக்கு சொல்லக்கூடாது... திருமாவளவன் வலியுறுத்தல்..!

ஆளுங்கட்சி நிகழ்ச்சிகளுக்கு லாரிகளில் ஆட்கள் ஏற்றி வரப்படுவதாக கூறிய அவர், ஒரு தலைபட்சமாக செயல்படுவதை காவல்துறையினர் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். சட்டத்துக்கு உட்பட்டே திமுக நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாகவும் இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு ஒரு நீதி? திமுகவுக்கு ஒரு நீதியா என கேள்வி எழுப்பினார்.

மேலும், சட்டம் ஒழுங்கை காப்பதில் இருந்து டிஜிபி கடமை தவறியிருப்பதாக டி.ஆர்.பாலு குற்றஞ்சாட்டினார். உதயநிதி ஸ்டாலின் கடந்த 3 நாட்களாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் டி.ஆர்.பாலு இந்த புகாரை முன் வைத்துள்ளார்.

English summary
T.R.Balu lodged a complaint at the police DGP office
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X