முழு பவர் கொடுத்த பிசிசிஐ.. நீல சட்டையை போட்டுகொண்டு இந்திய டீமோடு இணைந்த தோனி.. பிளான் என்ன?
சென்னை: முன்னாள் இந்திய அணி வீரரும் சிஎஸ்கே கேப்டனுமான தோனி இந்திய அணியின் ஆலோசகராக நேற்று பணியில் இணைந்து உள்ளார்.
ஐபிஎல் 2021 தொடர் முடிந்துள்ள நிலையில் உலகக் கோப்பை டி 20 தொடர் நேற்று தொடங்கியது. இதில் இன்று இங்கிலாந்தை இந்தியா பயிற்சி ஆட்டத்தில் எதிர்கொள்ள இருக்கிறது.
இந்த 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. டெல்டா மாவட்டங்களுக்கு எப்போது மழை? வானிலை மையம் தகவல்
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவை வீழ்த்தி ஐபிஎல் சீசனில் 4வது முறையாக சாம்பியன் மகுடத்தை சிஎஸ்கே சூடி உள்ளது. கொல்கத்தாவிற்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிஎஸ்கே கோப்பையை வென்றுள்ளது.

ஆலோசகர்
ஐபிஎல் தொடர் முடிந்த நிலையில் நேற்று இந்திய அணியின் ஆலோசகராக தோனி பணியில் இணைந்தார். பிசிசிஐ மூலம் இந்திய அணியின் ஆலோசகராக டி 20 தொடருக்கு தோனி நியமனம் செய்யப்பட்டார். இதற்காக தோனி எந்த விதமான சம்பளமும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மாலை இந்திய அணியோடு இணைந்தவர் வீரர்களோடு பயிற்சியில் ஈடுபட்டார்.

பயிற்சி
இந்திய அணியில் இணைந்து இருக்கும் தோனிக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி பொதுவாக ஆலோசாகருக்கு அணியில் ஆலோசனை வழங்கும் பணிகள் மட்டுமே இருக்கும். அதாவது பிட்ச் எப்படி இருக்கும், டாஸ் வென்றால் என்ன செய்வது, ஒரு வீரர் பார்ம் அவுட் ஆனால் அவரை எப்படி மீட்டு கொண்டு வருவது ஆகிய விவரங்களை மட்டுமே ஆலோசகர் வழங்குவார்.

தோனி
ஆனால் இந்திய அணியில் ஆலோசகராக இணைந்து இருக்கும் தோனி கூடுதல் பவர் வழங்கப்பட்டுள்ளது. ஒரு பயிற்சியாளருக்கு இருக்கும் அதே பணிகள் இவருக்கும் வழங்கப்பட்டுள்ளன. அதே பவர் இவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஆடும் 11 பேர் கொண்ட வீரர்களை தேர்வு செய்வது, ஆட்டத்தின் போது திட்டங்களை உருவாக்குவது, வீரர்களுக்கு அறிவுரை, பயிற்சி, ஆலோசனை வழங்குவது என்று அதே பவர் தோனிக்கும் வழங்கப்பட்டுள்ளது.

முழு பவர்
சாஸ்திரிக்கு பயிற்சியாளராக இதுதான் கடைசி தொடர் என்பதால் தோனிக்கும் சாஸ்திரிக்கும் கருத்து வேறுபாடு எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. டி 20 ஜாம்பாவான் தோனி என்பதாலும், டி 20ல் நல்ல கேப்டன்சி செய்ய கூடியவர் என்பதாலும் தோனிக்கு இந்த சிறப்பு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அணியில் பார்மில் இல்லாமல் இருக்கும் சில வீரர்களை மீண்டும் கொண்டு வர தோனி உதவியாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

பாண்டியா
ஹர்திக் பாண்டியா, அஸ்வின் போன்ற வீரர்களை மீண்டும் பார்மிற்கு கொண்டு வரவும், அவர்களின் முழு பொட்டன்ஷியலை வெளிக்கொண்டு வரவும் தோனியின் ஆலோசனை உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த கோப்பையை எப்படியாவது வாங்கியாக வேண்டும் என்பதால்தான் தோனிக்கு முழு பவர் கொடுத்து பிசிசிஐ களமிறக்கி உள்ளதாக தெரிகிறது.