சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹைகோர்ட் இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணியின் புகைப்படம் நீக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ஹைகோர்ட் இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைப்படி மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு செல்ல மறுத்து சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வி.கே. தஹலி ரமாணி பதவி விலகல் கடிதம் அளித்தார். இதையடுத்து கடந்த 9-ஆம் தேதி முதல் அவரது அமர்வில் பட்டியலிடப்பட்ட வழக்குகளை தலைமை நீதிபதி விசாரிக்கவில்லை.

இதையடுத்து தலைமை நீதிபதி, நீதிபதி துரைசாமி அடங்கிய அமர்வு ரத்து செய்யப்பட்டது. செப்டம்பர் 10,12,13 தேதிகளில் தலைமை நீதிபதி அமர்வு செயல்படவில்லை.

Tahilramanis picture and name was removed from Highcourt website

இந்த நிலையில் தொடர்ந்து 5-ஆவது நாளாக வரும் திங்கள்கிழமையும் தலைமை நீதிபதி அமர்வில் வழக்குகள் ஏதும் பட்டியலிடப்படவில்லை. இந்த நிலையில் கொலீஜியத்தின் பரிந்துரை மற்றும் தனது பதவி விலகல் கடிதத்தின் மீது ஜனாதிபதி முடிவெடுக்கும் வரை வழக்குகளை விசாரிப்பதிலிருந்து தலைமை நீதிபதி விலகியிருப்பார் என கூறப்படுகிறது.

மகளிர் லோன்... மைக்ரோ பைனான்ஸ்களிடம் சீரழிந்து வரும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள்.. பகீர் தகவல்மகளிர் லோன்... மைக்ரோ பைனான்ஸ்களிடம் சீரழிந்து வரும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள்.. பகீர் தகவல்

அது போல் உயர்நீதிமன்ற நிர்வாக நடவடிக்கைகளில் இருந்தும் தலைமை நீதிபதி விலகியிருப்பார் என தகவல்கள் கூறப்பட்டது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற இணையதளத்தில் தலைமை நீதிபதி தஹில் ரமாணியின் புகைப்படம் இடம்பெறாமல் உள்ளது.

அது போல் நீதிபதிகள் பட்டியலிலி இடம்பெற்றிருந்த அவரது பெயர் தற்போது இல்லை. இது மட்டுமல்லாமல் அவரது படமும் நீக்கப்பட்டுவிட்டது. இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.

English summary
Chennai High court's Chief Justice Tahilramani's image was removed from Higcourt's website.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X