சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரசியல் சட்டத்துக்கு விரோதமா செயல்படும் கிரண் பேடியை உடனே வாபஸ் வாங்குங்க.. ஸ்டாலின் ட்விட்

Google Oneindia Tamil News

சென்னை: புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநரான கிரண்பேடியை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் புதுச்சேரி அரசின் அதிகாரத்தில் தலையிடுவதற்கு துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு, உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்து இருப்பது வரவேற்கத்தக்கது என கூறியுள்ளார்

Take immediate return of the Puducherry Deputy Governor Kiran Bedi..Stalins assertion

மேலும் அரசியல் சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டு வரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநரை உடனே திரும்பப்பெற வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

அரசின் அன்றாட நிகழ்வுகளில் கிரண்பேடி தனது அதிகார வரம்பை மீறி செயல்படுவதாக குற்றம் சாட்டி, புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தாய்வீடான சத்தியமூர்த்தி பவனின் கதவுகள் திறந்திருக்கின்றன.. தமாகாவினருக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு! தாய்வீடான சத்தியமூர்த்தி பவனின் கதவுகள் திறந்திருக்கின்றன.. தமாகாவினருக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு!

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அதிகாரத்தில் தலையிட துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி கிரண்பேடி சார்பில், மத்திய உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தனது பணிகளை சரிவர மேற்கொள்ள இயலவில்லை என்று சொலிசிட்டர் ஜெனரல் முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கவும் உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இம்முடிவை வரவேற்று தான் ஸ்டாலின் தற்போது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

English summary
DMK leader Stalin urged the central government to withdraw Puducherry deputy governor kiran bedi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X