• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

கத்தியால் குத்தி.. மாணவி சுவேதா படுகொலை.. "பெண்களுக்கு பாதுகாப்பே இல்லையா".. கொந்தளித்த சரத்குமார்

Google Oneindia Tamil News

சென்னை: "தனி மனித வாழ்வியல் முறையில், ஒருவர் மற்றவர் மீது அதிகாரத்தையும், வலுக்கட்டாயமாக ஆசைகளையும் திணிக்கக்கூடாது" என்று தாம்பரத்தில் மாணவி கொலை செய்யப்பட்டது குறித்து சமக தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அத்துடன், பொது இடங்களில் அரசு மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்று பள்ளி, கல்லூரிகள் அருகேயும் இனி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

  அன்று நுங்கம்பாக்கத்தில் ஸ்வாதி.. இன்று தாம்பரத்தில் ஸ்வேதா.. கழுத்தறுத்து கொலை.. சென்னையில் ஷாக்!

  சென்னை தாம்பரம் அடுத்த கிறிஸ்தவ கல்லூரி எதிரே, நேற்று மாலை ஒரு கல்லூரி மாணவியும், இளைஞரும் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்தனர்... பிறகு அவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறியது.

  அப்போது ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த மாணவியின் கழுத்தில் குத்தியுள்ளார். உடலில் 6 இடங்களில் குத்துப்பட்ட மாணவி சுவேதா அங்கேயே விழுந்து இறந்துவிட்டார்.

  வைரலான பிரதமர் மோடி படம்.. 2 ட்வீட் போட்டு பங்கமாய் கலாய்த்த ஜோதிமணி எம்.பி.. எகிறிய நெட்டிசன்கள்! வைரலான பிரதமர் மோடி படம்.. 2 ட்வீட் போட்டு பங்கமாய் கலாய்த்த ஜோதிமணி எம்.பி.. எகிறிய நெட்டிசன்கள்!

   முயற்சி

  முயற்சி

  உடனே அந்த இளைஞரும் தன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.. இவ்வளவும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்துள்ளது.. சுவேதாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த பயணிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர்.. பட்டப்பகலில் நடந்த இந்த கொடூரத்தை பார்த்த அவர்கள், 2 பேரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்...

   விசாரணை

  விசாரணை

  உடனடியாக போலீசுக்கும் தகவல் சொன்னார்கள்.. போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். கொலை செய்யப்பட்ட மாணவி, பெயர் சுவேதா என்பதும் 21 வயதான அந்த பெண் குரோம்பேட்டை ராதாநகரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.. இவரது அப்பா மதியழகன் அரசு பஸ் டிரைவராக வேலை பார்க்கிறார்.. சுவேதா அங்குள்ள ஒரு கல்லூரியில் லேப் டெக்னீஷியனுக்குப் படித்து வந்துள்ளார்..

   நிறுவனம்

  நிறுவனம்

  ராமச்சந்திரன் என்ற 25 வயது இளைஞரை காதலித்துவந்துள்ளார்... ராமச்சந்திரன் பிஈ பட்டதாரியாம்.. காதலிக்காகவே சென்னையில் ரூம் எடுத்து தங்கி வேலை ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே இவர்களின் காதல் விவகாரமும் சுவேதாவின் வீட்டுக்கு தெரியவந்ததும், மகளை கண்டித்துள்ளனர்... இதனால் சுவேதாவும், 4 மாதங்களாக ராமச்சந்திரனிடம் சரியாக பேசவில்லையாம்.. ஒதுங்கி போயுள்ளார்.. காதலையும் முறித்து கொள்வதாக சொல்லி உள்ளார்..

   சுவேதா

  சுவேதா

  இதுதான் இவர்களுக்கிடையே தகராறாக உருவெடுத்துள்ளது. தனக்கு கிடைக்காத காதலி யாருக்கும் கிடைக்க கூடாது என்ற முடிவில்தான் நேற்று வந்துள்ளார். கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும் என்று சொல்லித்தான் சுவேதாவை நம்ப வைத்து வரவழைத்துள்ளார்.. இறுதியில் இப்படி ஒரு கொடூரம் நடந்துமுடிந்துவிட்டது.. சுவேதாவின் குடும்பத்தினர் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை முன்பு ஒன்று திரண்டுவிட்டனர்..

  வாக்குவாதம்

  வாக்குவாதம்

  உரிய விசாரணை எடுக்கவில்லை என்றால் சடலத்தை வாங்கமாட்டோம் என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்... தமிழகம் முழுவதும் இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. நுங்கம்பாக்கம் சுவாதி விஷயத்தில் கடைசிவரை நீதி கிடைக்காத நிலையில், இன்னொரு சம்பவமும் இப்படி நடந்துள்ளது கவலையை தந்து வருகிறது.. முக்கிய பிரமுகர்கள் இந்த கொலை குறித்த கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.. அந்த வகையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரும் கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார்.

   மாணவி

  மாணவி

  அதில், "தனியார் கல்லூரியில், லேப் டெக்னீசியன் பயின்று வந்த ஸ்வேதா என்ற மாணவியை தாம்பரம் கிழக்கு பகுதி ரயில் நிலையம் அருகில் ராமச்சந்திரன் என்பவர் படுகொலை செய்த சம்பவம் நெஞ்சை பதறச் செய்வதுடன், மிகுந்த மன வேதனையளிக்கிறது. சென்னை புறநகரில், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடத்தில், பகலில் இது போன்று கொலை செய்யும் சூழல் சுவாதி முதல் ஸ்வேதா வரை தொடர்ந்து வருவது, பெண்களின் பாதுகாப்பற்ற நிலையை காட்டுகிறது.

  சரத்குமார்

  சரத்குமார்

  பொதுவெளியில் மக்களின் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியது அரசின் கடமை என்பது ஒருபுறம் இருந்தாலும், தனி மனித வாழ்வியல் முறையில், ஒருவர் மற்றவர் மீது அதிகாரத்தையும், வலுக்கட்டாயமாக ஆசைகளையும் திணிக்கக்கூடாது என்ற அடிப்படைக் கல்வியை பெறாததே இது போன்ற குற்ற செயல்களுக்கான காரணமாக கருதுகிறேன். பொது இடங்களில் அரசு மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்று பள்ளி, கல்லூரிகள் அருகேயும் இனி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

  கொலையாளி

  கொலையாளி

  சமூகத்தை காவல்துறையினர் கண்காணிப்பது போன்று, குடும்பத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும். அவர்களது எண்ண ஓட்டங்களையும், செயல்பாடுகளையும் ஆராய்ந்து நல்வழிப்படுத்துவது பெற்றோரின் கடமை. பொது இடங்களில், பெண்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இது போன்ற தொடர் கொலை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கொலையாளிக்கு கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

  English summary
  Tambaram Student Swetha Murder and Women have no protection, Actor Sarathkumar statement
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X