• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீமான் அண்ணே நீங்களா? பொன்னியின் செல்வனை கலாய்த்த டோலிவுட்டன்கள்! பிரபாஸை வறுத்தெடுக்கும் தமிழன்கள்!

Google Oneindia Tamil News

சென்னை : பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பாகுபலி படத்தோடு ஒப்பிட்டு தெலுங்கு ரசிகர்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வார்த்தை போரில் ஈடுபட்டு வரும் நிலையில் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் டீசரில் வரும் பிரபாஸ் கேரக்டர் நாம் தமிழர் கட்சி சீமானை வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

நாயகன் தொடங்கி தளபதி, இராவணன் தொடங்கி தற்போது ஓகே கண்மணி வரை நீண்ட காலமாக 'அப்டேட்' இயக்குனரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுத்துள்ளார். நீண்ட முயற்சிகளுக்கு பிறகு இந்த படம் வெளிவந்துள்ளது.

படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இல.கணேசனின் உடல்நிலை சீராக உள்ளது..2 நாட்களில் வீடு திரும்புவார் - எம்.ஜி.எம். மருத்துவமனைஇல.கணேசனின் உடல்நிலை சீராக உள்ளது..2 நாட்களில் வீடு திரும்புவார் - எம்.ஜி.எம். மருத்துவமனை

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்துடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர் தெலுங்கு ரசிகர்கள். குறிப்பாக பாகுபலி பிரம்மாண்டம் காட்சி அமைப்பு கதை வடிவம் ஆகியவற்றுக்கு பொன்னியின் செல்வன் படம் ஈடாகாது என கூறி வருகின்றனர். குறிப்பாக போர் காட்சிகள் பொன்னியின் செல்வன் படத்தில் அவ்வளவு சிறப்பாக இல்லை என்றும், சிஜி ஒர்க்குகளை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என குறை கூறி வருகின்றனர்,

ஆதி புருஷ்

ஆதி புருஷ்

இந்த நிலையில் தான் வான்டடாய் வந்து வண்டியில் ஏறிய கதையாக தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இருக்கும் ஆதிபுருஷ் படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. ராமாயண கதையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் ராமன் கேரக்டரில் நடிகர் பிரபாஸ் நடித்திருக்கிறார். படத்தின் டீசர் வெளியாகி படும் மொக்கை என கமெண்ட் செய்து வருகின்றனர் இந்திய அளவிலான ரசிகர்கள்.

படு மொக்கை

படு மொக்கை

குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்தினை போல் இருப்பதாகவும் பலரும் விமர்சித்து வருகின்றனர் வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல் கிடைத்த வாய்ப்பைக் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர் தமிழ் ரசிகர்கள். ஆதிபுருஷ் படம் வீடியோ கேம் போல் இருப்பதாகவும் இதற்காக இவ்வளவு மொக்கையாக இருக்கும் இதை வைத்துக் கொண்டா பொன்னியின் செல்வன் படத்தை விமர்சிக்கிறீர்கள் என தெலுங்கு ரசிகர்கள் என்ற போர்வையில் இருக்கும் பொன்னியின் செல்வன் எதிர்ப்பாளர்களை விளாசி எடுத்து வருகின்றனர்.

சீமான்

சீமான்

குறிப்பாக பிரபாஸ் கேரக்டர் நாம் தமிழர் கட்சி சீமானை வைத்து உருவாக்கியது போல் இருப்பதாக பழைய புகைப்படங்களை வைத்து கமெண்ட் செய்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க பொன்னியின் செல்வன் இது போன்ற நெகடிவ் விமர்சனங்களை தாண்டி பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கிறது. உலக அளவில் சுமார் 5000 திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் அந்த படம் இதுவரை 200 கோடிக்கு மேல் கலெக்ஷன் செய்திருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறது படக்குழு. மேலும் இந்த வாரம் முழுவதும் தொடர் விடுமுறை என்பதால் பல படத்தின் சாதனைகளை முறியடிக்கும் என்கின்ற பொன்னியின் செல்வன் ரசிகர்கள்.

English summary
Telugu fans have been engaged in a war of words on social media for the past few days comparing Ponni's Selvan with Baahubali. In this case, discussions are going on on social media that the Prabhas character appearing in the teaser of Adipurush starring Prabhas has been created based on Naam Tamilar Katchi Seeman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X