சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு விரலை அழுத்தி ஓட்டுக்கூட போட முடியலேன்னா.. நீதான் முதல் திருடன்.. ஏ.ஆர். முருகதாஸ்

ஓட்டு உனது உரிமை என்று இயக்குனர் ஏஆர் முருகதாஸ் விழிப்புணர்வு ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: "ஒரு விரல் புரட்சி"யை சர்க்கார் படம் மூலமாக வெளிப்படுத்திய இயக்குனர் ஏஆர் முருகதாஸ், "ஓட்டு உனது உரிமை" என்று ட்வீட் செய்து அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

'சர்க்கார்' படம் வெளியாவதற்கு முன்னேயே பல சர்ச்சைகளை தாங்கி வந்தது. அரசு கொடுத்த இலவச பொருட்களை தூக்கி வீசியும், எறிந்தும், கொளுத்தியும் பல சீன்கள் அதில் இடம்பெற்று இருந்ததே அதற்கு காரணம்.

இலவசங்களை தருவதற்கு பதில் மக்களுக்கு உபயோகமான முறையில் அரசு பணத்தை செலவழித்தால் நன்றாக இருக்குமே என்று யோசனையும் அந்த படத்தில் முன் வைக்கப்பட்டது.

தமிழக வரலாற்றில் முதல்முறை இப்படி ஒரு தேர்தல்.. முக்கியமான விஷயங்களை மறந்த தேர்தல் ஆணையம்தமிழக வரலாற்றில் முதல்முறை இப்படி ஒரு தேர்தல்.. முக்கியமான விஷயங்களை மறந்த தேர்தல் ஆணையம்

மதித்து நடந்தார்

மதித்து நடந்தார்

இது ஆளும் தரப்பை கொதித்தெழ செய்தது. கோர்ட் வரை கேஸ் போனது. நல்லா ஓடக்கூடிய படத்தை ரொம்ப ரொம்ப நல்லாவே ஓட வைத்தும் விட்டார்கள். சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கும்படி உத்தரவு வந்ததும், அதனை மதித்து முருகதாஸ் நீக்கவும் செய்தார். ஆனால் அப்போதுகூட இந்த விஷயத்தில் யாருக்காகவும், எதற்காகவும், தன்னை கடைசிவரை காம்ப்ரமைஸ் செய்து கொள்ளவே இல்லை.

49-ஓ சட்டம்

49-ஓ சட்டம்

சர்க்கார் படத்தை பொறுத்தவரை "49-ஓ" என்ற சட்டத்தை பாமரனுக்கும் கொண்டு போய் சேர்த்தது முருகதாஸ் என்றுகூட சொல்லலாம். தன்னுடைய வாக்கை இன்னொருத்தர் போட்டுவிட, அதனை எதிர்கொண்டு வாதாடி ஜெயிப்பது மாதிரி கதையை அமைத்து இருப்பார். இந்த சட்டம்தான் 49-ஓ!

இத்தனை கேஸ்களா? உங்கள் தொகுதி எம்.பியின் கேஸ் ஹிஸ்டரி தெரியுமா?

தேர்தல் ஆணையம்

சமீபத்தில்கூட தேர்தல் ஆணையம் தன்னுடைய விளம்பரத்தில் இந்த 49-ஓ என்பதை வெளிப்படுத்தி இருந்தது என்றால் அதற்கு காரணம் முருகதாஸ்தான் என்றுகூட சத்தமாகவே சொல்லலாம்! இந்நிலையில், இப்போது முருகதாஸ்,"100% ஓட்டு அளிப்போம்..!" என்று தெரிவித்துள்ளதுடன் "ஓட்டு உனது உரிமை.." என்றும் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், சர்க்கார் படத்தின் வீடியோக்களை இணைத்துள்ளார்.

முதல் குற்றவாளி

முதல் குற்றவாளி

அந்த வீடியோவில் ஒரு ஓட்டு என்பது எவ்வளவு முக்கியம் என்று விஜய் பேசும் காட்சி உள்ளது. இதை தவிர, "முக்கியமான வேலையே இருந்தாலும் சரி.. நிறுத்திட்டு போய் ஓட்டை போடுங்க" என்று ஒரு சீனில் சொல்கிறார் விஜய். "ஒரே ஒரு விரலை அழுத்தி இந்த நாட்டுக்காக ஓட்டுக்கூட போட முடியலேன்னா.. நீதான்டா முதல் திருடன்.. நீதான்டா முதல் குற்றவாளி" என்கிறார் மற்றொரு சீனில்!

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

முருகதாஸ் இந்த நேரத்தில் இப்படி ஒரு பதிவை போட்டுள்ளது.. கிட்டத்தட்ட நாட்டு மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம் என்றே சொல்லலாம்.

English summary
Tamil Film Director AR Murugadoss tweet, "Voting is your Right" for 18th TN Election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X