சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழ் மொழி நீக்கம்... அரசு பள்ளி வருகை பதிவேட்டில் இந்தி சேர்ப்பு.. ஆசிரியர்கள் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

Recommended Video

    Biometric Attendance | அரசு பள்ளி வருகை பதிவேட்டில் இந்தி சேர்ப்பு.. ஆசிரியர்கள் அதிர்ச்சி- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவை உறுதி செய்யும் பயோமெட்ரிக் மெஷினில் தமிழ் எழுத்துக்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பதில் இந்தி எழுத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளதாவும் புகார் எழுந்துள்ளது.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசியர்களின் வருகை பதிவை கண்காணிக்க விரல் நேரகை வருகை பதிவு (பயோமெட்ரிக்) முறை தமிழகத்தில் கடைபிடிக்கப்படுகிறது.

    tamil language removed, hindi added at biometric attendance of school teachers in tamilnadu

    தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் சோதனை முயற்சியாக ஆசியர்களுககு பயோமெட்ரிக் வருகை பதிவு முறை கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் கடந்த ஜூன் மாதம் முதல் அதாவது இந்த கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    பெரியார் மய்யத்தில் ஏன் இந்தி.. டிவீட் போட்டு எச். ராஜா கேள்வி.. நெட்டிசன்கள் பதிலடி!பெரியார் மய்யத்தில் ஏன் இந்தி.. டிவீட் போட்டு எச். ராஜா கேள்வி.. நெட்டிசன்கள் பதிலடி!

    இதன்படி ஆசியர்கள் காலையில் பள்ளிக்கு வந்த உடனேயே தலைமை ஆசிரியர் அறையில் வைக்கப்பபட்டு இருக்கும் பயோ மெட்ரிக் மெஷினில் தங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்து தங்களது வருகை நேரத்தை உறுதி செய்வார்கள். இது அன்றாடம் கடைபிடிக்கப்படுகிறது.

    இதன்மூலம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்த நேரத்தை அந்த எந்திரம் பதிவு செய்துவிடும். பின்னர் ஆதார் எண்களில் கடைசி 8 எண்களை பதிவு செய்ய வேண்டும். இதேபோல் பள்ளி நேரம் முடிந்து வெளியே செல்லும்போதும் கைரேகையை பதிவு செய்வார்கள்.

    இதற்காக அந்த எந்திரத்தில் முன்பு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத்துகள் திரையில் காண்பித்து வந்ததது. இந்நிலையில் அந்த எந்திரத்தில் தமிழ் நீக்கப்பட்டுள்ளதாகவம், இதற்கு பதிலாக இந்தி சேர்க்கப்பட்டுள்ளது என்றும் இதனால் தற்போது இந்தி மற்றும் ஆங்கில எழுத்துகள் மட்டுமே தெரிகிறது என்று புகார் எழுந்துள்ளது.. இதனிடையே இந்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மீண்டும் தமிழ் எழுத்துகள் இடம் பெற வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    English summary
    biometric attendance of govt school teachers in tamilnadu, teachers shocked over tamil language removed, hindi added at
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X