• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

அதெல்லாம் பொய்.. எல்லாம் பொறாமை.. பாஜகவுடன் இணையும் திட்டமில்லை.. ஜிகே.வாசன் விளக்கம்!

|

சென்னை: தமாகாவை பாஜகவுடன் இணைப்பதாக வரும் செய்திகளில் உண்மையில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் விளக்கமளித்துள்ளார்.

ஜிகே வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தவே அவர் டெல்லியில் முகாமிட்டதாகவும் தகவல்கள் பரவின.

Tamil manila congress will not link to BJP: GK Vasan

இதைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும் என அறிக்கை விடுத்தார். இந்நிலையில் இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு ஜிகே வாசன் பேட்டியளித்தார்.

அப்போது தாமாகா பாஜகவுடன் இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். தமாகா தனித்தன்மையுடன் செயல்படுவதாகவும், கட்சியின் வளர்ச்சியை பிடிக்காதவர்களின் சதி இது என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ரவுண்டடிக்கும் ஜிகே வாசன் ஆட்டோ.. அமைச்சர் பதவிக்காக கேம்ப்பா (அ) காங்.கில் இணைய திட்டமா?டெல்லியில் ரவுண்டடிக்கும் ஜிகே வாசன் ஆட்டோ.. அமைச்சர் பதவிக்காக கேம்ப்பா (அ) காங்.கில் இணைய திட்டமா?

கட்சியின் வளர்ச்சியை பிடிக்காத சிலரின் பொறாமை தான் இது என்றும் ஜிகே வாசன் கூறியுள்ளார். மேலும், பாஜக.,வில் இணைவதாக வந்த செய்திகள் வடிகட்டிய பொய் என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

English summary
Tamil Manila Congress will not link to BJP, GK Vasan has denied the information.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X