சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழ் ஒலைச்சுவடிகள் எங்கே.. சர்ச்சையில் தமிழ் மரபு அறக்கட்டளை.. கொதிக்கும் தமிழ் ஆர்வலர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியரை தமிழ் மரபு அறக்கட்டளையைச் சேர்ந்த சுபாஷினி தங்களது வலைதளத்தில் சமணர் என்று போட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுஒருபுறம் எனில் இவர்கள் மின்னாக்கம் செய்ய வாங்கிய ஒலைச்சுவடிகள் எல்லாம் முறையாக தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு கொடுக்கப்பட்டுவிட்டதா என்ற கேள்வியும் எழுகிறது.

Recommended Video

    Digital ஆக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் எங்கே? | Karthikeyan Prabhu

    நம்முடைய தமிழ் மொழியில் எழுத்தப்பட்ட பல்லாயிரம் நூல்கள் ஒலைச்சுவடிகளில் இருந்தவை தான். பல ஓலைச்சுவடிகள் அழிந்து போய்விட்டன. இதனால் நமக்கு தெரியாமலேயே போய்விட்டன.

    இந்நிலையில் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்த போது மதுரை மாவட்டத்தின் ஆட்சியராக இருந்தவர் ஹாரிங்டன். இவரிடம் சமையல் வேலை பார்த்துவந்தவர் கந்தப்பன். இவர் தான் அயோத்திதாசரின் தாத்தா. அந்தக் காலகட்டத்தில், தமிழர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் பழங்கால ஓலைச்சுவடிகள் இருந்து வந்தது. அப்படித்தான் அயோத்திதாசரின் தாத்தாவான கந்தப்பரிடம் இருந்தது. கந்தப்பர் குடும்பம் ஓலைச்சுவடிகள் வாசிக்கும் குடும்பம் என்று கூறப்படுகிறது.

    ஏற்றுமதி செய்வதற்கு முன்.. கடைசி நொடியில் தடுக்கப்பட்ட வேக்சின்.. சீனாவின் செயலால் கோபத்தில் கனடா! ஏற்றுமதி செய்வதற்கு முன்.. கடைசி நொடியில் தடுக்கப்பட்ட வேக்சின்.. சீனாவின் செயலால் கோபத்தில் கனடா!

     கந்தப்பர் கொடுத்தது

    கந்தப்பர் கொடுத்தது

    இந்நிலையில் ஆங்கிலேயே அரசு ஓலைச்சுவடிகளை பாதுகாக்க விரும்பிய நிலையில் தன்னிடம், இருந்த ஓலைச்சுவடிகளை கந்தப்பர் அதை மதுரை கலெக்டர் ஹாரிங்டனிடம் ஒப்படைத்தார் அவர் அதை அப்போது சென்னை மாகாண வருவாய்த்துறைச் செயலாளராக இருந்த எல்லீஸிடம் ஓப்படைத்தார், அப்படி வந்ததுதான் திருக்குறள். இப்படி பல அரிய நூல்கள் நம்மிடம் வந்துள்ளன. இந்நிலையில் தஞ்சை பல்கலைக்கழகத்தில் இருந்து வாங்கப்பட்ட சில முக்கிய `ஓலைச்சுவடிகள் திருடப்பட்டுவிட்டதாகவும் முறையாக அவை தஞ்சை பல்கலையிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    ஒலைச்சுவடி சேகரிப்பு

    ஒலைச்சுவடி சேகரிப்பு

    அமெரிக்காவில் தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் போராடி வரும் அமைப்புகள் உள்ளன. அமெரிக்காவில் இருந்து தான் இதற்காக குரல்கள் கிளம்பி உள்ளன. அமெரிக்காவின் கணக்டிக்கெட் நகரில் வசிக்கும் தமிழ் ஆர்வலரான கார்த்திகேயன் பிரபு இதுபற்றி நம்மிடம் கூறுகையில், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன், `தமிழ் மரபு அறக்கட்டளை' எனும் தனியார் அமைப்பு இணைந்து 2010-ம் ஆண்டில் நடத்திய ஓலைச்சுவடி சேகரிப்பை தொடங்கியது. ஜெர்மனியில் வசிக்கும் சுபாஷினி அமைப்பின் தலைவராக உள்ளார். இவருக்கு ஓலைச்சுவடிகளை சேகரித்துக் கொடுக்கும் பணியில் அண்ணாமலை சுகுமாறன் என்பவரை தஞ்சை பல்கலைக்கழகம் நியமித்தது. அவர் தான் சுமார் 96 ஆயிரம் ஓலைச்சுவடிகளை சேகரித்து தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் சுபாஷினியிடம் கொடுத்தார்.

    2லட்சம் ஓலைச்சுவடி

    2லட்சம் ஓலைச்சுவடி

    இவை எதுவும் மின்னாக்கம் செய்யப்படவில்லை தஞ்சை பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது. எனவே 2017ல் 20000 ஓலைச்சுவடிகள் மின்னாக்கம் செய்ததாக சுபாஷினி அவர்கள் கூறியதாக பேட்டி வந்துள்ளது. எனவே 2 லட்சம் ஓலைச்சுவடிகள் எங்கிருந்து வந்தது. யாரால் கொடுக்கப்பட்டது என்பது அடிப்படையான கேள்வி எழுகிறது. டிஜிட்டல் மயமாக்கியதாக சொல்லப்படுவது என்னென்ன என்பதை வெளியிட வேண்டும்.

    தஞ்சை பல்கலை

    தஞ்சை பல்கலை

    அண்ணாமலை சுகுமாறன் அவர்கள் 2010ல் சேகரித்த ஓலைச்சுவடிகள் தஞ்சை பல்கலைக்கழகத்தில் உள்ளது. 2015 மற்றும் 2016ல் அவர் சேகரித்த ஓலைச்சுவடிகளை அவருடைய தளத்தில் வைத்துள்ளார். அதுபோல் சுபாஷினி அவர்கள் வைத்துள்ள ஓலைச்சுவடி தகவல்கள் எங்கே, எவ்வளவு ஓலைச்சுவடி சேகரித்தீர்கள் அல்லது எவ்வளவு மின்னாக்கம் (டிஜிட்டல்) ஆனது " என்று கேள்வி எழுப்பினார். இதற்கிடையே தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியரை தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைதளத்தில் சமணர் என்று போட்டிருப்பது குறித்தும் தமிழ் ஆர்வலர் கார்த்திகேயன் பிரபு கேள்வி எழுப்பினார். இதுபற்றி மேலும் பல முழுயைமான தகவல்களை வீடியோவில் பாருங்கள்.

    English summary
    Tamil activist Karthikeyan Prabhu Interview about manuscripts of tamil and Tamil Heritage Foundations acting
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X