சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்னும் 13 ஆயிரம் கேஸ்கள் தான்.. தமிழகத்தில் கொரோனாவை வேகமாக வெல்லப்போகும் மாவட்டங்கள் எவை?

Google Oneindia Tamil News

சென்னை : தமிழகத்தில் அக்டோபர் 21 ம் தேதி மாலை நிலவரப்படி ஒரே நாளில் 1,164 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 1,412 பேர் ஒரே நாளில் மீண்டனர். கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று 14,058
ஆக இருந்த நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 13,790 ஆக குறைந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மே இரண்டாவது வாரத்தில் 36 ஆயிரம் என்கிற அளவில் தினசரி பாதிப்பு இருந்தது. ஆனால் தற்போது 1100 என்கிற நிலையில் உள்ளது. கோவை, ஈரோடு, சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் அக்டோபர் 21 ம் தேதியான இன்று கொரோனா தொற்றால் 1,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26,91,797 ஆக உயர்ந்துள்ளது.

100 கோடி தடுப்பூசி.. மத்திய அரசை பாராட்டிய சசிதரூர்... சுடச்சுட பதிலடி கொடுத்த காங்கிரஸ்! 100 கோடி தடுப்பூசி.. மத்திய அரசை பாராட்டிய சசிதரூர்... சுடச்சுட பதிலடி கொடுத்த காங்கிரஸ்!

எவ்வளவு

எவ்வளவு

அதேநேரம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,412 பேர் ஒரே நாளில் மீண்டனர். இதனால் ஒட்டுமொத்தமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 26,42,039 ஆக உயர்ந்துள்ளது.

 உயிரிழப்பு எவ்வளவு

உயிரிழப்பு எவ்வளவு

தமிழகத்தில் கொரோனா காரணமாக அக்டோபர் 21 ம் தேதி மாலை நிலவரப்படி 20 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 35,968 ஆக உயர்ந்துள்ளது.

சரிந்தது

சரிந்தது

தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13 ஆயிரம் ஆக குறைந்து உள்ளது . தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்று 14,058 ஆக இருந்த நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 13,790 ஆக குறைந்துள்ளது. . அதாவது நேற்றைவிட இன்று ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

கோவையில் பாதிப்பு

கோவையில் பாதிப்பு

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 152 பேரும், கோவையில் 137 பேரும், செங்கல்பட்டில் 98 பேரும், ஈரோட்டில் 89 பேரும், திருப்பூரில் 73 பேரும், சேலத்தில் 59 பேரும், திருவள்ளூரில் 46 பேரும், தஞ்சாவூரில் 55 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் 1735 ஆகவும், கோவையில்1488 ஆகவும், செங்கல்பட்டில் 1070 ஆகவும், ஈரோட்டில் 878 ஆகவும் உள்ளது. அரியலூர், பெரம்பலூர், தென்காசி, தேனி, விருதுநகர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஆக்டிவ்கேஸ்கள் 80க்கும் கீழாக உள்ளது. இந்த மாவட்டங்கள் விரைவாகவே கொரோனாவை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது

English summary
As on the evening of October 21, 1,164 people have been confirmed covid infected in Tamil Nadu in a single day. At the same time, 1,412 people recovered from corona damage in a single day. The number of people receiving treatment for corona infection has dropped from 14,058 yesterday to 13,790 today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X