சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்.. 92.3 சதவீதம் பேர் தேர்ச்சி.. இந்த வருடமும் மாணவிகளே அசத்தல் தேர்ச்சி!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வை 7,99,717 மாணவ மாணவிகள் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர்.

இதில் 7,79,931 பேர் தேர்வு எழுதியிருந்தனர். 4,24,285 மாணவியர்களும், 355646 மாணவர்களும் தேர்வு எழுதியிருந்தனர்.

11, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது.. முடிவுகளை எப்படி அறிவது.. விவரம் 11, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது.. முடிவுகளை எப்படி அறிவது.. விவரம்

இணையதளம்

இணையதளம்

பொதுப்பாடப்பிரிவில்7,28516 பேரும், தொழிற்பாடப்பிரிவில் 51415 பேரும் தேர்வுகள் எழுதியிருந்தனர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை dge.tn.gov.in, dge.tn.nic.in, examresults.net, http://www.results.nic.in/ என்ற இணையதளங்களில் பார்க்கலாம்.

மாணவிகள் அதிகம் பேர்

மாணவிகள் அதிகம் பேர்

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 92.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 94.80 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 89.41 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவியர் 5.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பள்ளிகள் தேர்ச்சி விகிதம்

பள்ளிகள் தேர்ச்சி விகிதம்

தமிழகத்தில் மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 7127. 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 2120. அரசு பள்ளிகள் 85.94 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.30 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மெட்ரிக் பள்ளிகள் 98.70 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இருபாலர் பள்ளிகளில் 92.72 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 தேர்ச்சி எந்த பாடப்பிரிவில் அதிகம்

தேர்ச்சி எந்த பாடப்பிரிவில் அதிகம்

பெண்கள் பள்ளிகளில் 94.81 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண்கள் பள்ளிகளில் 83.91 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அறிவியல் பாடப் பிரிவுகளில் 83.64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வணிகவியல் பாடப்பிரிவுகளில் 92.96 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கலைப் பிரிவுகளில் 84.65 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொழிற்பாடப்பிரிவுகளில் 76.88 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

English summary
12th standard results declared. 92.3 % cleared the exams
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X