சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் கொரோனாவிற்கு 467 பேர் பாதிப்பு - 471 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று 467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 471 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று 467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,50,096 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 471 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,33,560 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 467 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,50,096 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 275 பேர் ஆண்கள், 192 பேர் பெண்கள்.

Tamil Nadu 467 people were affected by the corona today - 471 people discharged

கொரோனா பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 471 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,33,560 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் இன்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் அரசு மருத்துவமனையிலும், 3 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளார்.இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12,483
பேராக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 4,053 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 68 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழாக குறைந்துள்ளது.

English summary
Corona infection has been confirmed in 467 people in Tamil Nadu today. Of those who spread the virus today, 471 were discharged after treatment in a single day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X