சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பள்ளிக்கூடம் போகாமலே, நாங்க பாடம் படிக்காமலே.. எடப்பாடியார் அதிரடியால் மாணவர்கள் செம்ம ஹேப்பி

Google Oneindia Tamil News

சென்னை: பள்ளிக்கூடம் போகாமலே, நாங்க பாடம் படிக்காமலே, பாஸான கூட்டமுங்க.. அண்ணணுக்கு பூமலை போட்டுவிடுங்க.. இந்த பாடல் வரி நடிகர் பிரசாந்த் நடிப்பில் வைகாசி புறந்தாச்சு என்ற படத்தில் இடம் பெற்றிருக்கும். அந்த பாடல் வரிகளை உண்மையாக்கி உள்ளார் முதல்வர் எடப்பாடியார்.

Recommended Video

    சென்னை: நோ எக்ஸாம்.. இந்த ஆண்டும் ஆல் பாஸ்: முதல்வர் அதிரடி அறிவிப்பு!

    9ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெறுவதாக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டும் இதேபோன்ற முடிவை அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதற்கு காரணம் உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் பீதி காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் வேறுவழியில்லாமல் தேர்ச்சி என்ற முடிவை அறிவித்தார். முதல்வர் எடப்பாடியார் மட்டுமல்ல பல மாநிலங்களும் இதே முடிவைத்தான் எடுத்தன.

    எடப்பாடியார் அதிரடி சரவெடி அறிவிப்பு.. தேர்வு கிடையாது.. 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் எடப்பாடியார் அதிரடி சரவெடி அறிவிப்பு.. தேர்வு கிடையாது.. 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் "ஆல் பாஸ்"

    வகுப்புகள் ஆரம்பம்

    வகுப்புகள் ஆரம்பம்

    இந்நிலையில் இந்த ஆண்டு கடந்த ஜனவரிக்கு பிறகு தான் 9முதல் 12 வகுப்புகள் இயங்க தொடங்கின. மாணவர்களுக்கு தேர்வு திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வந்தனர்.

    மாணவர்கள் தயார்

    மாணவர்கள் தயார்

    10ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்றே முதலில் அரசு தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகின. சட்டசபை தேர்தலுக்கு பிறகு 10ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என்றும் கூறப்பட்டது. ஏனெனில் பள்ளிகள் இயங்காத காரணத்தால் மாணவர்கள் பாடங்கள் எதுவும் இதுவரை சரியாக படிக்காமல் இருந்தனர். இனிதான் தயாராக வேண்டிய நிலை இருந்தது.

    முதல்வர் அறிவிப்பு

    முதல்வர் அறிவிப்பு

    இந்நிலையில் தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 11ம் வகுப்புகளுக்கு தேர்வு இன்றி அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் மாணவர்கள் ஆல்பாஸ் ஆகி உள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களை பார்த்து பெருமூச்சுவிட்ட இந்த ஆண்டு மாணவர்களுக்கும் ஆல் பாஸ் வழங்கியதன் மூலம் மாணவர்களிடையே முதல்வர் எடப்பாடியின் புகழ் உயர்ந்துள்ளது.

    மாணவர்கள் ஹேப்பி

    மாணவர்கள் ஹேப்பி

    பள்ளிக்கூடம் போகாமலே, நாங்க பாடம் படிக்காமலே, பாஸான கூட்டமுங்க.. அண்ணணுக்கு பூமலை போட்டுவிடுங்க.. இந்த பாடல் வரி நடிகர் பிரசாந்த் நடிப்பில் வைகாசி புறந்தாச்சு என்ற படத்தில் இடம் பெற்றிருக்கும். அந்த பாடல்வரிகளை முதல்வர் எடப்பாடியார் மாணவர்களுக்கு உண்மையாக்கி உள்ளார். கொரோனாவால் பாடங்களை படிக்க முடியாத நிலையில் எப்படி படிக்க போகிறோம். பாஸ் ஆக போகிறோம் என்று கவலைப்பட்ட மாணவர்களுக்கு முதல்வர் அறிவிப்பு செம்ம சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

    English summary
    Without going to school, without studying our lessons .. tamilnadu 9th, 10th, 11th students all pass this year: CM Edappadi Palanisamy announcement , Students are very happy now.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X