• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

3 வருட போராட்டத்துக்கு பின் கோமதி முகத்தில் மகிழ்ச்சி.. எடப்பாடியார், ஸ்டாலின் செய்த பேருதவி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டால் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் 227 அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. அதில் கோமதி என்ற மாணவியும் ஒருவர்.

நீ ட் தேர்வில் வெற்றி பெற்று, இடஒதுக்கீடு சலுகையால் எம்பிபிஎஸ் படிப்பில் சேரப்போகிறார் கோமதி. இவர் கடந்த 2018ம் ஆண்டு ஜூலையில் நீட் தேர்வில் வெற்றி பெற்றும் அவரால் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை. காரணம் அவ்வளவு மதிப்பெண் அப்போது அவர் எடுக்கவில்லை.

கோமதியை பற்றி பிரபல ஆங்கில ஊடகம் அப்போது செய்தியும் வெளியிட்டது. இந்நிலையில் தற்போது கோமதி நீட் தேர்வில் வென்றுள்ளதுடன் 7.5 சதவீத இடஒதுக்கீட்டால் எம்பிபிஎஸ் கனவு நிறைவேறி உள்ளது. ஆனால் சீட் கிடைத்தும் பொருளாதார வசதி இல்லாமல் அவதிப்பட்டார்.

தமிழக அரசியலில் இடைவிடாமல் சொல்லப்படும் வெற்றிடம்... நிஜந்தானா? பதில் தர காத்திருக்கும் 2021தமிழக அரசியலில் இடைவிடாமல் சொல்லப்படும் வெற்றிடம்... நிஜந்தானா? பதில் தர காத்திருக்கும் 2021

உதவிய முக ஸ்டாலின்

உதவிய முக ஸ்டாலின்

இதற்கிடையே திமுக தலைவர் முக ஸ்டாலின் மாணவி கோமதி குறித்து கேள்விப்பட்டு அழைத்து மருத்துவம் படிக்க தேவையான காசோலையை வழங்கி உள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளார் கோமதி.

சம கல்வியை கொடுங்கள்

சம கல்வியை கொடுங்கள்

முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு கோமதி அளித்த பேட்டியில், "சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மாணவர்களுடன் போட்டியிட கட்டாயப்படுத்துவதற்கு முன்பு எங்களுக்கு ஏன் சம வாய்ப்பை வழங்கக்கூடாது? 'நான் என்னை நிச்சயம் நிரூபிப்பேன், ஆனால் நீங்கள் எங்களுக்கு ஒரு பொதுவான தேர்வை எழுதுவதற்கு முன்பு எங்களுக்கு சமமான கல்வியைக் கொடுங்கள் என்று பிரதமர் வந்தால் கூட இதை கேட்பேன்" என்று கூறியிருந்தார்.

கோமதி உடைந்து போகவில்லை

கோமதி உடைந்து போகவில்லை

கடந்த மூன்று ஆண்டுகளில் பல நீட் தற்கொலைகள் மாநிலத்தை உலுக்கியபோதும், கோமதி நீட் தேர்வை கண்டு பயப்படவில்லை. அவர் கடினமாக உழைத்தார். ஒவ்வொரு நாளும் 20 மணிநேரம் படித்தார், பாடப்புத்தகங்களைப் படிப்பது தான் அவருடைய வேலையாக இருந்து. கோமதியின் பெற்றோர், தினசரி கூலித் தொழிலாளர்கள், குடும்பத்தை நடத்துவதற்கு சிரமப்பட்டார்கள். அந்த சூழலிலும் மருத்துவம் கற்க வேண்டும் என்று போராடி இப்போது வென்றுள்ளார் கோமதி. இரண்டு ஆண்டுகளாக மருத்துவம் படிக்கும் முயற்சியில் தோற்றதால் மனம் உடைந்து போகவில்லை. 3வது முயற்சியில் இப்போது மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார்.

கனவு நினைவானது

கனவு நினைவானது

புதன்கிழமை நடந்த கலந்தாய்வில் சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. அவரது தந்தை அன்பழகன் டிவி ஷோருமில் கிளீனராக வேலை செய்கிறார். கோமதி தன்னம்பிக்கையுடன் பேசுகையில், நான் அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும். நான் கலந்தாய்வில் 21 வது இடத்தைப் பிடித்தேன், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் சேர முடிந்தது. அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு (7.5 சதவீதம்) இல்லையென்றாலும், நான் மருத்துவ படிப்பில் சேர்ந்திருப்பேன். ஆனால் சென்னையில் உள்ள வேறு கல்லூரியில் சேர்ந்திப்பேன் என்றார். அவர் கோச்சிங் எடுக்கவில்லை, சொந்தமாகவே படித்திருக்கிறார். கோமதியின் தந்தை அன்பழகனின் மாத சம்பளம் ரூ .7,500. அவர் தனது மகளுக்கு நீட் பயிற்சிக்கு தேவையான ரூ .45,000த்தை கொடுப்பது சாத்தியமே இல்லாத ஒன்றை வசூலிக்க முடியாது. தன்னம்பிக்கையுடன் படித்து வென்ற கோமதி மாணவர்களுக்கு நல்ல உதாரணம். வாழ்த்துக்கள் கோமதி!. இடஒதுக்கீடு கொடுத்து எடப்பாடியார் உதவினார் என்றால் படிக்க காசு கொடுத்து ஸ்டாலின் உதவி உள்ளார்.

English summary
A Gomathi, 19, was among 227 government school students of Tamil Nadu selected for medical admission. she thanks to 7.5 per cent reservation introduced by the state exclusively for government school students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X