சென்னை வேளச்சேரி தொகுதியில் 92-வது வாக்கு சாவடியில் இன்று மறுவாக்குப் பதிவு
சென்னை: தமிழகத்தில் நேற்று நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 72.76 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. 234 தொகுதிகளிலும் பதிவான வாக்கு சதவீதம் குறித்து இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல்கள் தொடர்பான லைவ் அப்டேட்டுகளை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.
Newest First Oldest First
தமிழ்நாடு
தனிப்பட்ட நபர்களை விமர்சிக்கவோ, அவதூறு கருத்துகளையோ தான் பேசவில்லை
தேர்தல் ஆணையத்திற்கு உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
தனது தமிழ்ப் பேச்சை ஆங்கிலத்தில் திரித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம்.
என்னுடைய பேச்சினை தவறாக அர்த்தம் கற்பித்துப் புகார் அளித்துள்ளனர் - உதயநிதி.
என்னுடைய இரண்டு வார்த்தைகளை வைத்து என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனக்கு வாய்ப்பளித்தால் முழு பேச்சின் சாராம்சத்தையும் அளிக்கத் தயாராக உள்ளேன் - உதயநிதி.
தமிழ்நாடு
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் 85.43 சதவீதம் வாக்குகள் பதிவு.
சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீதம் வாக்குகள் பதிவு.
தி.நகர், வேளச்சேரி, மைலாப்பூர், சைதாப்பேட்டையில் 57%க்கும் குறைவான வாக்குப்பதிவு.
சோழிங்கநல்லூர், சேப்பாக்கம், துறைமுகம் உள்பட சென்னையில் பல தொகுதிகளில் 60%க்கு கீழ் வாக்குப்பதிவு .
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் 85.43 சதவீதம் வாக்குகள் பதிவு
— Oneindia Tamil (@thatsTamil) April 7, 2021
சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீதம் வாக்குகள் பதிவு
தி.நகர், வேளச்சேரி, மைலாப்பூர், சைதாப்பேட்டையில் 57%க்கும் குறைவான வாக்குப்பதிவு pic.twitter.com/IiSSqH2COO
தமிழ்நாடு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பது நமது தலையாய கடமை .
திமுக வேட்பாளர்கள், கூட்டணி கட்சியினருக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை .
24 மணி நேரமும் இரவு பகல் பாராது கண் விழித்துப் பாதுகாத்திட வேண்டும் .
தேர்தல் பணி என்பது தொடரவே செய்கிறது என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்
வாக்குப்பதிவு நிறைவடைந்ததை முன்னிட்டு வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டன.
தமிழகத்தில் 234 தொகுதிகளில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்குச்சாவடிகளில் இயந்திரங்கள் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டன.
வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுகின்றன.
மே 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன
5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல்: இரவு 7.11 மணி நிலவரப்படி வாக்குப் பதிவு .
தமிழ்நாடு- 65.11% .
புதுச்சேரி- 78.13% .
கேரளா- 70.04% .
மேற்கு வங்கம் (3வது கட்டம்)- 77.68% .
அஸ்ஸாம் (3வது மற்றும் இறுதி கட்டம்) 82.29%
Voter turnout in #AssemblyElections2021 till 7:11 pm:
— ANI (@ANI) April 6, 2021
Assam 82.29%, Kerala 70.04%, Puducherry 78.13%, Tamil Nadu 65.11% and West Bengal 77.68%
தமிழ்நாடு
தமிழகத்தின் 16வது சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவுற்றது.
234 தொகுதிகளில் 3998 வேட்பாளர்களுக்கான வாக்குப்பதிவு முடிந்தது.
அரசியல் கட்சித் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் காலையிலேயே தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
மாநிலம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு மேல் கொரோனா பாதித்தவர்கள் கொரோனா தடுப்பு கவச உடைகளுடன் வாக்களித்தனர்
READ MORE
Comments
தமிழக சட்டசபைத் தேர்தல் 2021 tamil nadu assembly election 2021 admk pmk vanniyar reservation தமிழக சட்டசபை தேர்தல் 2021 அதிமுக பாமக வன்னியர் இடஒதுக்கீடு politics
English summary
Here is live Updates of Tamilnadu Assembly Elections.