சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்றால் என்ன? தமிழகத்தில் இன்று முதல் என்னென்ன கட்டுப்பாடுகள்!

Google Oneindia Tamil News

சென்னை: நாடு முழுவதுமோ அல்லது ஒரு மாநிலத்தில் அல்லது ஒரு தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டால், தேர்தலை நியாயமாகவும் அரசியல் சார்பு அற்றதாகவும் நடத்துவதற்காக தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக உடனயடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் மாநிலத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி உறுப்பினர்களின் அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்படும். தேர்தல் நடத்தை விதிகள் தளர்ந்த பின் இந்த அலுவலகங்கள் திறக்கப்படும்.

அரசு வாகனங்கள்,

அரசு வாகனங்கள்,

இதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகமும் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும். தேர்தல் முடிந்த பின்னரே திறக்கப்படும்.
இதேபோல ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் பயன்படுத்திய அரசு வாகனங்கள், மாவட்ட ஊராட்சி தலைவரின் அரசு வாகனங்கள் உள்ளிட்டவற்றை அரசு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

புகைப்படங்கள் அகற்றம்

புகைப்படங்கள் அகற்றம்

அரசியல் கட்சியினர் விளம்பர படுத்தும் வகையில் இருக்கும் முதல்வர், பிரதமர், அரசியல் கட்சியினரின் முக்கிய தலைவர்கள் உள்பட தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது காலெண்டர்கள் அரசு அலுவலங்களில் உடனடியாக அகற்றப்படும்.

பரிசு பொருட்கள்

பரிசு பொருட்கள்

இதேபோல் 50000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாக வெளியில் எடுத்து சென்றால் அதற்கு உரிய ஆவணங்களை காண்பிக்க வேண்டும். வாக்காளர்களை கவரும் நோக்கில் பணம் அல்லது பரிசு பொருட்கள் விநியோகிக்க கூடாது. இதை தடுக்கவே தேர்தல் ஆணையம் உரிய ஆவணம் இல்லாமல் பணம் கொண்டு செல்ல தடை விதித்துள்ளது.

புதிய அரசு வர வேண்டும்

புதிய அரசு வர வேண்டும்

இன்று முதல் அனைத்து நலத்திட்ட உதவிகள் தேர்தல் முடிந்து புதிய அரசு வரும் வரை நிறுத்தப்படும். ரேஷன் கார்டு விண்ணப்பம், முதியோர் உதவி தொகை விண்ணப்பம், விதவையர் விண்ணப்பம், சமுக நலத்திட்ட உதவிகள் கோருவது உள்பட அனைத்து பொதுசேவைகளும் தேர்தலுக்கு பின்னர் புதிய அரசு அமைந்த பின்னரே செயல்பாட்டிற்கு வரும்.

தடை இல்லை

தடை இல்லை

சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் இப்போது உள்ள அரசு காபந்து அரசாக மாறிவிடும். அரசால் எந்த அறிவிப்பும் புதிதாக வெளியிட முடியாது. ஏற்கனவே நிதி ஒதுக்கி செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு எந்த தடையும் இல்லை

English summary
The Election Commission of India (ECI) is announced the Assembly poll dates for Kerala, West Bengal, Tamil Nadu, Assam and Puducherry in a press conference on Friday.The Model Code of Conduct (MCC) laid down by the ECI comes into effect soon as the dates for the elections are announced. It is necessary for all political parties to heed the MCC. Let us take a look at what it is and what it comprises.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X