சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாஸ்க் போடலைன்னாலும்... தள்ளி நிற்காவிட்டாலும் பைன் - மசோதா நிறைவேற்றம்

syn: கொரோனா விதிமுறைகளை கடுமையாக்கும் மசோதா சட்டசபையில் ஏகமனதாக நிறைவேறியது. தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் இருப்போருக்கும் அபராதம் விதிக்க மசோதா வழிவகை செய்கிறது.

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதை தடுப்பது இனி தண்டனைக்குரிய குற்றமாகும். கொரோனாவை விதிமுறைகளை கடுமையாக்கும் மசோதா சட்டசபையில் ஏகமனதாக நிறைவேறியுள்ளது. முகக் கவசம் அணியாமல் இருப்பவர்கள், தனி நபர் இடைவெளியை பின்பற்றாவிடில் அபராதம் விதிக்கப்படும் எனவும் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபைக் கூட்டம் இரண்டாவது நாளாக நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கொரோனா காலத்தில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 3.82 லட்சம் பிரசவங்கள் நடந்துள்ளதாக தெரிவித்தார்.

Tamil Nadu Assembly passes bill Penalty for not wearing the mask. The bill passed unanimously in the Assembly

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4,620 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடைபெற்றுள்ளதாகவும் சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனாவை விதிமுறைகளை கடுமையாக்கும் மசோதாவை தாக்கல் செய்தார்.

அதன்படி கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதை தடுப்பது இனி தண்டனைக்குரிய குற்றம். விதிமுறைகளை பின்பற்றாத தனிநபர்கள், நிறுவனங்களுக்கு ரூ.200 முதல் ரூ.5000 வரை அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேமுதிகவின் 16ம் ஆண்டு தொடக்க விழா- சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பாடுபடுவோம்- விஜயகாந்த் தேமுதிகவின் 16ம் ஆண்டு தொடக்க விழா- சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பாடுபடுவோம்- விஜயகாந்த்

மாஸ்க் அணியாமல் இருப்பவர்கள், தனி நபர் இடைவெளியை பின்பற்றாவிடில் அபராதம் விதிக்கப்படும் எனவும் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மசோதா ஏகமனதாக சட்டசபையில் நிறைவேறியது.

English summary
Tamil Nadu Assembly passes bill Penalty for not wearing the mask. The bill passed unanimously in the Assembly. The bill also fined if they do not follow the individual gap.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X