சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குடிமகன்களுக்கு ஒரு வருத்தமான செய்தி.. தமிழகத்தில் 2698 டாஸ்மாக் கடைகள் மூடல்

Google Oneindia Tamil News

Recommended Video

    8-ஆவது முறையாக தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஓ.பன்னீர் செல்வம்- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் 2698 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

    பட்ஜெட்டை தாக்கல் செய்துவிட்டு ஆற்றிய உரையில் அவர் கூறுகையில் தமிழகத்தில் 2698 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்திருந்தார்.

    Tamil Nadu Budget 2019: 2698 Tasmac shops were closed

    2018-19ல் 8000 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. உரிய காலத்தில் பயிர்க்கடன் திரும்ப செலுத்துவோருக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது.

    வரும் நிதியாண்டில் 10,000 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 75,448 பெண்கள் இலவச கறவை மாடு திட்டத்தால் பலன் பெற்றுள்ளனர். விலையில்லா வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் திட்டத்திற்காக 198.75 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    விலையில்லா மாடு, ஆடு திட்டம் வரும் நிதியாண்டிலும் தொடரும். தீவன அபிவிருத்தி திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    கால்நடை பராமரிப்பு துறை உட்கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளோம் என்றார் ஓபிஎஸ்.

    English summary
    Tamil Nadu Budget 2019: 2698 tasmac shops were closed during ADMK regime as per Jayalalitha's election memorandam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X