சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எய்ம்ஸ் மருத்துவமனை அமைய அடிக்கல் நாட்டிய பிரதமருக்கு நன்றி.. பட்ஜெட் உரையில் ஓபிஎஸ்

Google Oneindia Tamil News

சென்னை: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய அடிக்கல் நாட்டிய பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.

தமிழக பட்ஜெட்டை இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில் அம்மா மகப்பேறு பரிசு பெட்டகம் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். அரசு மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகள், ஏழை, எளிய நலிவடைந்தோருக்கு கிடைக்க உறுதி செய்யப்படும்.

Tamil Nadu Budget 2019: OPS thanked PM Narendram Modi for stone laid for AIIMS in madurai

உலக வங்கி கடன் உதவியுடன் 2685.19 கோடி செலவில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். அனைத்து அரசு மருத்துவமனைகள் தேவையான அளவுக்கு இருப்பு வைப்பதில் நாட்டிலேயே தமிழகம் முன்னிலையில் உள்ளது.

அனைத்து நிலை மருத்துவமனைகளிலும் முக்கிய உடற்பரிசோதனைகள் தொகுப்பாக கிடைக்க உறுதி செய்யப்படும். இந்த திட்டத்திற்கு தேவைப்படும் கருவிகள், உபகரணங்கள் வழங்கப்படும்.

உடற்பரிசோதனை தொகுப்பு திட்டத்திற்கு வரும் 3 ஆண்டுகளில் 247 கோடி செலவிடப்படும். 2019-20ம் நிதியாண்டில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரூ.12,563.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் ஓபிஎஸ்.

English summary
Tamil Nadu Budget 2019: O.Panneer Selvam thanked PM Narendra Modi for stone laid for AIIMS in Madurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X