சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக பட்ஜெட் 2019... மாநில வரி வருவாய் ரூ.1.26 லட்சம் கோடி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசின் மொத்த வருவாய் செலவீனங்கள் ரூ,2,12, 035, 93 கோடியாக இருக்கும் என துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

2019 - 2020 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றினார். அதில், நிதி ஆதாரங்களை பெருக்க திறன்மிக்க வரி மேலாண்மை அவசியம் என்றார்.

Tamil Nadu Budget 2019: Rs 2,12,355, 93 crore total revenue expenditure of the state government

மின் ஆளுமை திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்றும், பதிவுத்துறையில் இணையவழி பயன்பாடுக்காக நவீன மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது எனவும் கூறினார்.

மாநில சொந்த வரி வருவாயில் வணிக வரி முக்கியத்துவமானதாகும் என்றும் வணிக வருவாய் 2019-20 ல் 96,177.14 கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

டாஸ்மாக் மூலம் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் மதுபான கடைகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது என்றும் மாநில ஆயத்தீர்வை போக்கினை கருத்தில் கொண்டு 7262.33 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

முத்திரைத்தாள் கட்டண வருவாயில் நல்ல வளர்ச்சி காணப்படுகிறது எனவும் முத்திரைத்தாள் தீர்வையாக, வரும் நிதியாண்டில், 11512.10 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றும் கூறினார். மேலும், அவர் பட்ஜெட் உரையில் பட்டியலிட்டவை பின்வருமாறு:

  • கடந்த நிதியாண்டை விட 2000 கோடி வருவாய் அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்

  • வாகனங்கள் மீதான வரி வருவாய், 6510.70 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்

  • மாநில சொந்த வரி வருவாய் ரூ.1.26 லட்சம் கோடியாக கணிக்கப்பட்டுள்ளது

  • வரியல்லாத வருவாய் 13 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது

  • 2019-20 ல் மாநில மொத்த வருவாய் வரவுகள் 1 லட்சத்து 97 ஆயிரம் கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது

  • மொத்த வருவாய் செலவீனங்கள் 2 லட்சத்து 12 ஆயிரத்து 35.93 கோடி ரூபாயாக இருக்கும்

  • வருவாய் பற்றாக்குறை 14314.76 கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது
    • மூலதன செலவுகளுக்கு அரசு எப்போதும் தனிக் கவனம் செலுத்தி வந்துள்ளதாகவும் கூறினார்.

    English summary
    Deputy chief minister O. Panneer Selvam has said that The total revenue expenditure of the state government will be Rs 2,12,355, 93 crore
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X