சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

TN Budget: "இது பாமக பட்ஜெட்".. முதல் ஆளாக ட்வீட் போட்டு அதிமுகவை சூப்பராக கூல் செய்த ராமதாஸ்!

அதிமுக பட்ஜெட் அறிவிப்புக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    TN Budget 2020 | TN Budget focuses on agriculture

    சென்னை: பட்ஜெட் முழுசாகூட அறிவித்து முடிக்கவில்லை.. அதற்குள் முதல் ஆளாக வந்து "இது பாமக பட்ஜெட்" என்பதுபோல.. ட்வீட்களை அடுத்தடுத்து போட்டு அதிமுகவை கூல் செய்துள்ளார் டாக்டர் ராமதாஸ்!

    ரஜினியுடன் பாமக கூட்டணி வைக்கும் என்று தமிழருவி மணியன், புதிய கூட்டணிக்கு மணியடித்து துவக்கி வைத்துவிட்டு போனார்.. இது தமிழக அரசியல் களத்தை வெவெலக்க செய்துவிட்டது.

    மறுநாளே, தமிழருவி மணியன் இது சம்பந்தமாக ஒரு விளக்கத்தை தந்தாலும், அதிமுக தரப்பை அதிகமாகவே டென்ஷன் ஏற்படுத்திவிட்டது என்ற சொல்லப்பட்டது.. இந்த விஷயம் தைலாபுர தோட்டத்துக்கும் சென்றதாம்.. இதற்கு பிறகுதான் "முதல்ல ரஜினி கட்சி ஆரம்பிக்கட்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெளிவுபடுத்தினார்.

     வாழ்வா, சாவா.. விளிம்பில் அதிமுக.. தீப்பொறிகளை கிளப்ப தயாராகும் திமுக.. பரபரப்பில் தமிழகம்! வாழ்வா, சாவா.. விளிம்பில் அதிமுக.. தீப்பொறிகளை கிளப்ப தயாராகும் திமுக.. பரபரப்பில் தமிழகம்!

    ட்வீட்

    ட்வீட்

    இப்போது, பட்ஜெட் நடந்து கொண்டிருக்கையில் முதல் ஆளாக வந்து, ட்வீட்களை போட்டு அதிமுகவை தூக்கி வைத்து பாராட்டி உள்ளார்.. 20-21ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார். துணை முதல்வர், பல்வேறு முக்கிய திட்டங்கள், அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றின அறிவிப்பினை வெளியிட்டார்... அதில், பெண்களின் பாதுகாப்புக்காக அனைத்து அரசு பஸ்களிலும் சிசிடிவி கேமிரா பொருத்தப்படும் என்று ஸ்பெஷல் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார்.

    முதல் ட்வீட்

    இந்த அறிவிப்புகளுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மகிழ்ச்சி ட்வீட் போட்டுள்ளதுடன், மற்ற அறிவிப்புகளையும் வரவேற்றுள்ளார்.. அந்த ட்வீட்கள் இவைதான்: "அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்தும் என்ற பட்ஜெட் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதன்மூலம் கடலூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வெற்றி!" என்கிறது முதல் ட்வீட்

    இரண்டாவது ட்வீட்

    "பா.ம.க.வின் மற்றொரு கோரிக்கை நிறைவேறியது. பெண்களின் பாதுகாப்புக்காக அனைத்து அரசு பேருந்துகளிலும் கண்காணிப்பு காமிரா பொருத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு" என்கிறது அடுத்த ட்வீட்

    மூன்றாவது ட்வீட்

    "அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு ரூ.500 கோடியும், காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு நிலம் எடுப்பதற்காக ரூ.700 கோடியும் ஒதுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது! தமிழ்நாட்டு நலனுக்காக பிற பாசனத் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்!" என்கிறது இன்னொரு ட்வீட்!

    தெளிவு

    தெளிவு

    பாமகவின் 2 கோரிக்கைகளை அதிமுக பட்ஜெட்டில் நிறைவேற்றி அறிவித்துள்ளதாக டாக்டர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.. அறிவிப்புகளை பாராட்டியும் உள்ளார்... அத்துடன் அதிமுகவுடனான தன்னுடைய கூட்டணி வலுவாகவே உள்ளது என்பதையும் ஆழமாகவே தெளிவுபடுத்தி உள்ளார்!

    English summary
    Tamil Nadu Budget 2020: pmk founder dr ramadoss praises announcements
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X