சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாழ்வா, சாவா.. விளிம்பில் அதிமுக.. தீப்பொறிகளை கிளப்ப தயாராகும் திமுக.. பரபரப்பில் தமிழகம்!

அதிமுகவுக்கு இதுதான் கடைசி பட்ஜெட்டாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    TN BUDGET 2020 | TN Govt will accept 'One nation One ration' scheme

    சென்னை: இந்த தமிழக பட்ஜெட், வாழ்வா, சாவா நிர்மாணிக்கும் பட்ஜெட்டாக அதிமுகவுக்கு அமைந்துள்ளது... ஆட்சியை தக்க வைத்து கொள்ள அதிமுக போராடுகிறது.. தீப்பொறிகளை கிளப்பி இந்த பட்ஜெட் தொடரை சாதகமாக்கி கொள்ள திமுக தயாராகிறது.. இதனால் மீண்டும் வருவோமா என்ற ஏக்கம் அத்தனை
    அதிமுகவினரின் மனதிலும் உள்ளது.. தொண்டர்கள் ஒருவிதமான உணர்வுகளில் மூழ்கியுள்ளனர்!!

    இன்றைய பட்ஜெட் மிக முக்கியமான பட்ஜெட்டாகவும் பார்க்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அதிமுக ஆட்சிக்கு வந்தது. இப்போது ஆட்சியில் உள்ள அதிமுக தாக்கல் செய்யும் இறுதி பட்ஜெட் இதுதான்.

    கருணாநிதி எந்த அளவுக்கு பட்ஜெட் மீது விழிப்பாக இருந்தாரோ, அதே அளவுக்கு ஜெயலலிதாவும் அதை கடைப்பிடித்து வந்தார்... ஜெயலலிதா ஆட்சியில் பட்ஜெட் தாக்கல் என்றாலே மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும்.. அரசு ஊழியர்களை தாங்கி பிடித்து கொண்டவர் ஜெயலலிதா.

    ரேஷனுக்கு செக்.. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை ஏற்க தமிழக அரசு முடிவு.. ஓ.பி.எஸ் பரபரப்பு அறிவிப்பு!ரேஷனுக்கு செக்.. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை ஏற்க தமிழக அரசு முடிவு.. ஓ.பி.எஸ் பரபரப்பு அறிவிப்பு!

    மாணவர்கள்

    மாணவர்கள்

    அதேபோல, விவசாயிகள், மாணவர்கள் நலனில் ஸ்பெஷல் அக்கறை எடுத்தே பட்ஜெட் தயாராகும்.. கூடுமானவரை குறைகளே பெருமளவில் சொல்லாமல் அனைத்து தரப்பையும் பூர்த்தி செய்யும்படி பார்த்து கொள்வார் ஜெயலலிதா! இப்போது, அவர் இல்லாத நிலையில் அதிமுகவின் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும்... அதிமுக ஆட்சி காலம் நிறைவடைய உள்ளது.

    கடைசி பட்ஜெட்

    கடைசி பட்ஜெட்

    அதன்பிறகு பொதுத்தேர்தல் நடக்கும்... இதனால் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்ய முடியும். அந்த வகையில், இப்போது தாக்கல் செய்வதுதான் கடைசி பட்ஜெட் ஆகும்! இந்த ஆட்சிக்கான கடைசி பட்ஜெட் இதுவா? அல்லது அதிமுகவுகான கடைசி பட்ஜெட் இதுவா என்பதுதான் தொண்டர்களின் கலக்கமும், குழப்பமும்!

    விவசாயிகள்

    விவசாயிகள்

    காரணம், ஏகப்பட்ட பிரச்சனைகள், சிக்கல்கள், சர்ச்சைகளில் அதிமுக சிக்கி உள்ளது.. தமிழக பிரச்சனைகள் என்று எடுத்து கொண்டால், குடியுரிமை திருத்த சட்டம், 7 பேர் விடுதலை, குரூப் 4 தேர்வு முறைகேடு, ஹைட்ரோ கார்பன் திட்டம்.. போன்றவைகளில் விழித்து கொண்டுள்ளது.. இதில் சிலவற்றில் மத்திய பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அதிமுக எடுத்திருந்ததுதான்.. இதில் ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக மாற்ற சிறப்பு சட்டம் இயற்றப்படும் என்று ஏற்கனவே எடப்பாடியார் அறிவித்துள்ளார்.. அதனால் விவசாயிகளின் வயிற்றில் எடப்பாடியார் நிச்சயம் பாலை பார்த்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மதுபானங்கள்

    மதுபானங்கள்

    அதேபோல, அரசின் வருவாயை பெருக்க என்னசெய்வதன்றே தெரியாமல், கடைசி நேரத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்தி வருவாயை கூட்டி உள்ளது.. இதுபோக மத்திய அரசிடம் நிலுவை 3,370 கோடி ரூபாய் வர வேண்டி உள்ளது.. மேலும் ஜிஎஸ்டி வரிவருவாயில் 4,073 கோடி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. ஆக, நிதி வருவாய், நிதி பற்றாக்குறை என்பது ஓரளவு சமாளிக்கப்படும் என்றே கணிக்கப்படுகிறது.

    படு தீவிரம்

    படு தீவிரம்

    இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், தனிப்பட்ட புகார்கள், சர்ச்சைகளில் அதிமுக வசமாக சிக்கி உள்ளது.. குறிப்பாக டிஎன்பிசி தேர்வு முறைகேடு, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செருப்பு விவகாரம், ராஜேந்திர பாலாஜியின் சர்ச்சைகள் என பட்டியல் நீள்கிறது.. இதை எல்லாம் அக்குவேறு ஆணி வேறாக பிரித்து கேள்வி கேட்க எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன.. இந்த பட்ஜெட்டை விட்டால், எப்போதுமே ஆட்சிக்கு வர முடியாது என்பதிலும் திமுக படு தீவிரமாகவே உள்ளது.. அதனால் தீப்பொறிகளை கிளப்ப திமுக தயாராக காத்து கொண்டுள்ளது.. இதிலிருந்து எல்லாம் அதிமுக எப்படி மீள போகிறது என்பதுதான் அக்கட்சி தொண்டர்களின் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது!!!

    English summary
    Tamil Nadu Budget 2020: Will this be the last budget for aiadmk
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X