சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Tamil nadu Budget 2021 LIVE: ஓபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக இடைக்கால பட்ஜெட்டில் பயிர் கடன் தள்ளுபடிக்காக ரூ5,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Recommended Video

    சென்னை: விபத்தில் பலியானால் ரூ.4 லட்சம் காப்பீடு… பட்ஜெட்டில் அறிவித்தார் ஓபிஎஸ்!

    இம்மாத இறுதி அல்லது, அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வாய்ப்பு உள்ள நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் இது இடைக்கால பட்ஜெட் என்று அழைக்கப்படுகிறது.

    தேர்தல் முடிந்த பிறகு பதவியேற்கும் அரசு மீண்டும் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டியிருக்கும்.

    Newest First Oldest First
    3:02 PM, 23 Feb

    சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்.27 வரை நடைபெறும்
    1:34 PM, 23 Feb

    தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்- ஓபிஎஸ்
    1:25 PM, 23 Feb

    கொரோனா காலத்தில் அரசு ஊழியர்களுக்கு தடையில்லாமல் ஊதியம் வழங்கியது தமிழக அரசு
    1:22 PM, 23 Feb

    காலை 11 மணிக்கு பட்ஜெட்டை வாசிக்க தொடங்கிய துணை முதல்வர் ஓபிஎஸ் 2 மணிநேரங்களுக்கும் மேலாக உரை
    1:22 PM, 23 Feb

    தமிழகத்தில் ரூ.39,941 கோடி மதிப்பில் 62 முதலீடு திட்டங்களுக்கு அனுமதி- ஓபிஎஸ்
    1:21 PM, 23 Feb

    சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ300 கோடி நிதி ஒதுக்கீடு
    1:18 PM, 23 Feb

    தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.41,417.30 கோடியாக இருக்கும்
    1:17 PM, 23 Feb

    தமிழக அரசின் வருவாய் ரூ.1,33,530 கோடி என மதிப்பீடு. தமிழக அரசின் வருவாய் செலவு ரூ. 2,46,694 கோடியாக இருக்கும்.
    1:16 PM, 23 Feb

    ரூ.6,448 கோடியில் சென்னை-குமரி தொழில் வழித்தட திட்டம் உருவாக்கப்படுகிறது
    1:14 PM, 23 Feb

    சத்துணவு திட்டத்தின் கீழ் 43,246 மாணவர்கள் பயனடைகின்றனர்
    12:52 PM, 23 Feb

    பாரம்பரிய நெல் ரகங்களுக்காக நெல் ஜெயராமன் மையம் நீடாமங்கலத்தில் அமைக்கப்பட்டு வருகிறது
    12:52 PM, 23 Feb

    அரசு ஊழியர் மருத்துவ காப்பீட்டுத் திட்ட தொகை ரூ4 லட்சத்தில் இருந்து ரூ5 லட்சமாக அதிகரிப்பு
    12:52 PM, 23 Feb

    அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.1,02,049 கோடி நிதிஒதுக்கீடு
    12:51 PM, 23 Feb

    சத்துணவு திட்டங்களுக்கு ரூ1953.98 கோடி நிதி ஒதுக்கீடு
    12:44 PM, 23 Feb

    உயர் கல்வித்துறைக்கு ரூ.5,478 கோடி நிதி ஒதுக்கீடு. பள்ளி கல்விதுறைக்கு ரூ34,181 கோடி நிதி ஒதுக்கீடு- ஓபிஎஸ்.
    12:44 PM, 23 Feb

    மின்கட்டண மானியங்களுக்கு ரூ8,834 கோடி நிதி ஒதுக்கீடு
    12:44 PM, 23 Feb

    மின்சாரதுறைக்கு ரூ7,217 கோடி நிதி ஒதுக்கீடு
    12:36 PM, 23 Feb

    தமிழகத்துக்கான பல்வேறு நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. நிலுவையில் உள்ள நிதிகளை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்- ஓபிஎஸ்.
    12:35 PM, 23 Feb

    பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான புதிய செஸ் வரியை நீக்க வேண்டும்- ஓபிஎஸ்.
    12:33 PM, 23 Feb

    தமிழகத்தில் பிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூ62,000 கடன்: மு.க.ஸ்டாலின்
    12:33 PM, 23 Feb

    தமிழக வரிவருவாய் 17.64% குறைந்துள்ளது
    12:31 PM, 23 Feb

    அத்திக்கடவு - அவிநாசி திட்டம் டிசம்பர் மாதம் நிறைவடையும்- ஓபிஎஸ்
    12:31 PM, 23 Feb

    திருமண நிதி உதவி- 10 ஆண்டுகளில் 12.50 லட்சம் பேருக்கு ரூ.1,791 கோடி மதிப்பில் தங்கம் வழங்கப்பட்டது
    12:31 PM, 23 Feb

    மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் பணிகளுக்கு ரூ.1374 கோடி நிதி ஒதுக்கீடு
    12:26 PM, 23 Feb

    பிரதமர் வீட்டு வசதி திட்டம்- மேற்கூரைக்கான மானியம் ரூ70,000 ஆக அதிகரிப்பு
    12:26 PM, 23 Feb

    பிரதமர் வீட்டு வசதி திட்டம்- மேற்கூரைக்கான மானியம் ரூ70,000 ஆக அதிகரிப்பு
    12:18 PM, 23 Feb

    2749 சமூக சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சுகாதார வளாகங்கள் கட்டுவதற்கு ரூ144.33 கோடி நிதி ஒதுக்கீடு.
    12:17 PM, 23 Feb

    40 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படும். குடிநீர் குழாய் இணைப்புகளுக்கு ரூ3,016 கோடி நிதி ஒதுக்கீடு.
    12:10 PM, 23 Feb

    தாமிரபரணி, கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டம் அடுத்த ஆண்டு மார்ச்சில் நிறைவடையும்
    12:09 PM, 23 Feb

    சரபங்கா நீரேற்று திட்டம் விரைவில் நிறைவடையும்
    READ MORE

    Tamil nadu budget 2021: O.Pannerselvam will present interim Budget on today
    English summary
    Tamilnadu budget 2021: Dy CM O.Pannerselvam will present interim Budget on today. Stay tune with us for live updates.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X