சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விரைவில் வரும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்? முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய விவாதம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் சட்டம் இயற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

    ஜல்லிக்கட்டுக்கு பிரம்மாண்ட அரங்கம்.. விரைவில் கட்டுமான பணிகள்.. CM ஸ்டாலின் அதிரடி!

    சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை செயலாளர், துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மார்ச் 5ல் அமைச்சரவை கூட்டம் நடந்த நிலையில் மீண்டும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.

    கருணை காட்டிய வருணபகவான்... சென்னையை குளிர்வித்த மழை.. பரவலாக பெய்ததால் மக்கள் பரவசம் கருணை காட்டிய வருணபகவான்... சென்னையை குளிர்வித்த மழை.. பரவலாக பெய்ததால் மக்கள் பரவசம்

    விவாதித்தது என்ன?

    விவாதித்தது என்ன?

    இந்த கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிப்பதுக்கு உண்டான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவது, சென்னையில் 2வது விமான நிலையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முதல் அமைச்சர் ஸ்டாலின் விவாதித்தார். மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டி பற்றியும், புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதவிர தமிழக நலன் சார்ந்த அரசின் முக்கிய கொள்கை முடிவுகளுக்கு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்

    ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்

    குறிப்பாக இந்த கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டை தடை செய்ய சட்டம் இயற்றுவது பற்றி விரிவாக்க ஆலோசிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த விஷயத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி உடனடியாக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

    நீதிபதியின் குழு

    நீதிபதியின் குழு

    முன்னதாக தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தற்கொலை சம்பவங்கள் அரங்கேறின. இதனால் இந்த விஷயத்தில் அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. பாமக உள்ளிட்ட பல கட்சிகள் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதையடுத்து ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சிறப்பு சட்டம் இயற்றுவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

    பத்திரிகையாளர்களை சந்திக்க வாய்ப்பு

    பத்திரிகையாளர்களை சந்திக்க வாய்ப்பு

    இந்த குழு முதல்வர் முக ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்த நிலையில் தான் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதனால் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான முக்கிய முடிவுகள் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சர் தங்கம் தென்னரசு பத்திரிகையாளர்களை சந்திக்கலாம் என கூறப்படுகிறது.

    English summary
    The Cabinet meeting was chaired by Chief Minister Mukha Stalin at the Chennai General Secretariat. It is learned that a major decision has been taken at this meeting to ban online gambling.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X