சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா தடுப்பு பணிக்காக உடனடியாக ரூ. 3000 கோடி கொடுங்க - பிரதமரிடம் கேட்ட முதல்வர்

கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டிற்கு 3000 கோடி ரூபாய் உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா தடுப்பு பணிக்காகவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு சிறப்பு நிதியாக 9000 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என முதல்வர் பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டிற்கு உடனடியாக 3000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி 10 மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். தமிழ்நாட்டில் 139 கொரோனா பரிசோதனை மையங்கள் இருப்பதாகவும் நாட்டிலேயே அதிக கொரோனா சோதனைகள் தமிழ்நாட்டில்தான் நடைபெறுகிறது என்றும் முதல்வர் எடுத்துக்கூறினார்.

Tamil Nadu Chief Minister seeks Rs 9000 crore COVID-19 grant from Central

தமிழகத்திற்கு கொரோனா தடுப்புப்பணிக்காகவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் ரூ. 9000 கோடியை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

நிலுவையில் உள்ள ஏப்ரல் - ஜூன் மாத ஜிஎஸ்டி தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். ஜிஎஸ்டி வருவாய் குறைந்த காரணத்தால் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு சிறப்பு நிதியாக 9000 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.

கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டிற்கு 3000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். நெல்கொள்முதல் செய்ய வேண்டி 1321 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்றும், தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 1000 கோடி ரூபாய் அளிக்கவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

நடுகடல், 200 மீ.ஆழம்.. பலமா அடிச்ச காத்து.. அந்த படகிலிருந்து இந்த படகுக்கு ஜம்ப் அடித்த ஜெயக்குமார்நடுகடல், 200 மீ.ஆழம்.. பலமா அடிச்ச காத்து.. அந்த படகிலிருந்து இந்த படகுக்கு ஜம்ப் அடித்த ஜெயக்குமார்

சிறு, குறு நிறுவனங்கள் மேம்பாட்டிற்காக 1000 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்றும் ஆலோசனையின் போது முதல்வர் கோரிக்கையாக முன்வைத்துள்ளார். உயர்தர வெண்டிலேட்டர்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு நிதியளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பிசிஆர் சோதனைக்கான செலவின் 50 சதவீதத்தை பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து ரூ. 1000 கோடி வழங்க வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டார்.

நவம்பர் வரை ரேசன் கடைகளில் வழங்க 55, 637 மெட்ரிக் டன் பருப்பு தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

English summary
TamilNadu Chief Minister K Palaniswami has asked to Prime Minister Narendra Modi on Tuesday and sought a Rs 9,000 crore grant to combat coronavirus in a video conference meeting with Prime Minister Narendra Modi on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X