சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிஏஏ பற்றி அச்சம் எதற்கு.. வாங்க, பேசலாம்.. 49 இஸ்லாமிய அமைப்புகளுடன் தமிழக தலைமைச் செயலாளர் ஆலோசனை

Google Oneindia Tamil News

சென்னை: சிஏஏ சட்டம் தொடர்பாக மொத்தம் 49 இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன், தமிழக தலைமை செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்தினார். இதில் போலீஸ் டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தேசிய அளவில் இஸ்லாமியர்கள் போராட்டங்களை நடத்திவருகின்றனர். சென்னையிலும் வண்ணாரப்பேட்டை, மண்ணடி போன்ற பகுதிகளிலும், தமிழகத்தின் பிற நகரங்களிலும் இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து பேரணி, பொதுக்கூட்டம் உள்ளிட்ட வகைகளில் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

Tamil Nadu chief secretary Shanmugam held meeting with 49 Islam organisations

அதே நேரம், இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் யாருக்கும் இந்த சட்டத்தால் பாதிப்பு இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக அறிவித்தார். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த பதிலை ஏற்க தயாராக இல்லை. போராட்டம் தொடர்கிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் ,இந்த விஷயத்தில் இஸ்லாமியர்களின் கோரிக்கையை ஏற்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றலாம் என்று அதிமுகவில் உள்ள சில தலைவர்கள் முதல்வரிடம் தொடர்ந்து வற்புறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளின் கருத்து கேட்பதற்காக தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் இன்று மதியம் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 49 இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

போலீஸ் டிஜிபி திரிபாதி, உள்துறை செயலாளர் பிரபாகர், சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அதில் இஸ்லாமிய அமைப்புகளின் அச்சம் என்ன? அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிகிறது.

தலைமை ஹாஜி சலாவுதீன், ஹஜ் கமிட்டியின் அபூபக்கர், ஜவாஹிருல்லா எம்எல்ஏ உள்ளிட்டோரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

English summary
Tamil Nadu chief secretary Shanmugam held meeting with 49 Islam organisations in Chennai on today over citizenship Amendment Act.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X