சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மின்துறையின் புது ஆப்.. புதிய ரக ஆவின் மோர், லஸ்ஸி, பால்.. அறிமுகம் செய்தார் முதல்வர் பழனிச்சாமி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு புதிய செயலியைஅறிமுகம் செய்தார். மேலும், ஆவின் நிறுவனத்தின் 5 புதிய பொருட்களையும் அறிமுகம் செய்தார்.

தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு என்று புதிய செயலியை தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிமுகம் செய்தார். www.tnpowerfinance.com மற்றும் TNPFCL என்ற பெயரில் செயலி வெளியானது. இத்துடன் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திலுள்ள 8,000 பயனாளிகளுக்கு ரூ.30 கோடி என்ற அளவில் நிதியுதவி திட்டத்தையும் அறிமுகம் செய்தார்.

Tamil Nadu CM Edappadi Palaniswamy has introduced new app and new brand of Aavin

இத்துடன், ஆவின் நிலையங்களில் மோர், சாக்கோ, லஸ்ஸி, மேங்கோ லஸ்ஸி, ஆவின் டீ மேட் பால், சமன்படுத்தப்பட்ட பால் ஆகிய 5 புதிய பொருட்களையும் அறிமுகம் செய்தார்.

கொரோனா தொற்று பாதிப்புகளுக்கு தினமும் பல்வேறு கட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வரும் முதல்வர் இன்றும் மாநிலத்தின் மேம்பாட்டுக்காக இந்த புதிய செயலியை அறிமுகம் செய்து வைத்தார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, ரூ. 381.76 கோடி மதிப்பில் கட்டப்படும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு முதல்வர் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

ஆன்லைன் வகுப்புகள் ஓகேதான்.. இத்தனை சவால்கள் இருக்கே.. அரசு இதை கவனத்தில் கொண்டால் நல்லாருக்கும்! ஆன்லைன் வகுப்புகள் ஓகேதான்.. இத்தனை சவால்கள் இருக்கே.. அரசு இதை கவனத்தில் கொண்டால் நல்லாருக்கும்!

மற்றும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏற்கனவே ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் வழங்கப்பட்ட அரிசி அளவின்படி நவம்பர் 2020 வரை விலையின்றி அரிசி வழங்கவும் உத்தரவிட்டு இருந்தார்.

English summary
Tamil Nadu CM has introduced new app to TN power finance and introduced new brands from Aavin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X