சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறினால் தளர்வுகள் வாபஸ்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி வார்னிங்.. வெளியான வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு வழங்க பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். விதிமுறைகள் மீறப்படுவது தெரிந்தால் தளர்வுகள் ரத்து செய்யப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

    ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறினால் தளர்வுகள் வாபஸ் - முதல்வர் Stalin வார்னிங்

    கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்பு தான் காரணம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட வீடியோ மெசேஜில் தெரிவித்துள்ளார்.

    கொரோனா ஊரடங்கில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

    இதுதான் 'தமிழ்நாடு மாடல் வளர்ச்சி'.. மருத்துவத்துறைக்காக.. ஸ்டாலின் எடுத்த சூப்பர் முயற்சி இதுதான் 'தமிழ்நாடு மாடல் வளர்ச்சி'.. மருத்துவத்துறைக்காக.. ஸ்டாலின் எடுத்த சூப்பர் முயற்சி

    பாதிப்பு குறைவு

    பாதிப்பு குறைவு

    உங்கள் நலன் காக்கும் இந்த அரசு தொடர்ச்சியாக எடுத்த நடவடிக்கையால் கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதிகபட்சமாக ஒரு நாளைக்கு தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 36 ஆயிரம் என்ற அளவுக்கு போனது. இது 50 ஆயிரமாக அதிகரிக்கும் என்று, மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்தனர். ஆனால், அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்துக்கும் கீழே சரிந்துள்ளது.

     மருத்துவமனையில் படுக்கை வசதிகள்

    மருத்துவமனையில் படுக்கை வசதிகள்

    மருத்துவமனையில் படுக்கைகள் இல்லை என்ற நிலை மாறியுள்ளது. வார் ரூமுக்கு உதவிகள் கேட்டு தினமும் வரும் தொலைபேசி அழைப்புகளும் குறைந்துள்ளது. உடனடியாக சிகிச்சை கிடைக்கும் நிலையை அரசு உருவாக்கி இருக்கிறது. அரசு பல்வேறுமுனைகளில் எடுத்த முயற்சிகளின் காரணமாக தான் இரண்டு வாரத்துல அனைத்தும் கட்டுக்குள் வந்துருச்சு. மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவித்தோம். மக்கள் முறையாக முழுமையாக கடைபிடித்ததால்தான் இந்த அளவுக்கு கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. இதற்காக மக்களிடம் நன்றி தெரிவிக்கிறேன்.

    முற்றுப்புள்ளி

    முற்றுப்புள்ளி

    மக்களுடைய எண்ணங்களை தான் அரசு செயல்படுத்தி வருகிறது. என்னதான் அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்தாலும் அதை மக்கள் பின்பற்றினால்தான் முழு வெற்றி சாத்தியமாகும். அதேபோன்ற எச்சரிக்கை உணர்வோடு மக்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது என்று சொன்னேனே தவிர, முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது எனக் கூறவில்லை. எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
    மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை உணர்ந்து, பல மாவட்டங்களில் தளர்வு கொண்டு வந்துள்ளோம்.

    தேவையில்லாமல் நடமாடக் கூடாது

    தேவையில்லாமல் நடமாடக் கூடாது

    தளர்வுகள் தந்துவிட்டார்கள் என அவசியம் இல்லாமல் வெளியே நடமாடக் கூடாது. தங்களுக்கு தாங்களே ஒவ்வொருவரும் சுய கட்டுப்பாடு விதிக்க வேண்டும். வணிகர்கள் விதிமுறையை பின்பற்றி தங்கள் வணிகத்தை செய்ய வேண்டும். தளர்வுகள் தருவது முக்கியமில்லை. அதை சரியாக பின்பற்ற வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். பல்வேறு விமர்சனங்கள் வரும் என்ற நிலையிலும் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. போலி மது, கள்ள மது போன்ற தீமைகள் தமிழகத்தை சீரழித்து விடக் கூடாது என்பதில் இந்த அரசு கவனமாக உள்ளது.

    தளர்வுகள் வாபஸ்

    தளர்வுகள் வாபஸ்

    டாஸ்மாக் கடைகள் முழு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். கொரோனா கால கட்டுப்பாடுகள் மீறப்படுமானால் எந்த நேரத்திலும் இந்த தளர்வுகள் திரும்ப பெறும் என்பதை எச்சரிக்கையோடு தெரிவித்துக்கொள்கிறேன். கட்டுப்பாடுகளை மீறுவோர், தங்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டுக்கும் தீமை செய்வோர் என்பதை உணர வேண்டும். காவல்துறை கண்காணிப்பு இல்லாமல் கட்டுப்பாடு காப்பார்கள் தமிழக மக்கள் என்று நம்புகிறேன்.

    பொதுப் போக்குவரத்து

    பொதுப் போக்குவரத்து

    முழு ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கிற மாதிரி நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். பொதுப் போக்குவரத்து விரைவில் இயங்க வேண்டும், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும். இதற்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியம். தொற்று பரவலை துண்டிக்கும் வல்லமை தமிழக மக்களுக்கு உள்ளது. இவ்வாறு ஸ்டாலின் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.

    English summary
    Tamil Nadu CM MK Stalin appealed to the public to cooperate with the lockdown. He warned that the relaxations would be revoked if the rules were found to be in violation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X